ஆன்மிகம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் தெப்போற்சவம் நிறைவு

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் தெப்போற்சவம் நிறைவு

Published On 2021-02-27 07:00 GMT   |   Update On 2021-02-27 07:00 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவத்தின் நிறைவு நாளான நேற்று இரவு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் 20-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் உற்சவர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்போற்சவத்தின் நிறைவு நாளான நேற்று இரவு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதையொட்டி திருப்பதியில் இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டம், அன்னமாச்சாரியார் திட்டம் ஆகியவை சார்பில் பக்தி பாடல்கள், பஜனை பாடல்கள், ஹரிகத காலேட்சபம், மங்கள வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

ெதப்போற்சவத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு, உதவி அதிகாரி ரவிக்குமார் ரெட்டி, கண்காணிப்பாளர்கள் வேங்கடாத்ரி, ராஜ்குமார், கோவில் ஆய்வாளர்கள் காமராஜ், முனிந்திரபாபு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News