ஆன்மிகம்
பக்தர்கள் இறங்குவதற்கு குண்டம் மைதானம் தயார் நிலையில் இருக்கும் காட்சி.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா

Published On 2021-02-27 05:53 GMT   |   Update On 2021-02-27 05:53 GMT
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 24-ந் தேதி நள்ளிரவு நடைபெற்றது. நேற்று முன்தினம் சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை ஆகியவை நடந்தன. நேற்று காலை 9.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், இரவு 6 மணிக்கு சித்திரதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனிபூஜை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News