ஆன்மிகம்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில்

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2021-02-17 05:01 GMT   |   Update On 2021-02-17 05:01 GMT
பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.

9-ம் திருநாளான 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், அதைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் தேரோட்டமும் நடக்கிறது.

வழக்கமாக விழா நாட்களில் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடைபெறும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News