ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

Published On 2021-01-21 04:45 GMT   |   Update On 2021-01-21 04:45 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு ராஜமேளம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பஜனை, 9 மணிக்கு 1008 சங்காபிஷேகம் ஆகியவை நடந்தது.

மதியம் 12.30 மணிக்கு உச்சபூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு அத்தாழபூஜை போன்றவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News