ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட காட்சி

பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம்

Published On 2020-09-10 04:28 GMT   |   Update On 2020-09-10 04:28 GMT
பழனி முருகன் கோவிலில் அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அன்னதானத்தில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரை பொங்கல் ஆகியவை பொட்டலத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்குக்கு பிறகு, பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அன்னதானத்தில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரை பொங்கல் ஆகியவை பொட்டலத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதில் காலை 300 பேர், மதியம் 400 பேர் மற்றும் மாலை 300 பேர் என ஒரு நாளைக்கு 1,000 பேருக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னதான பொட்டலம் வழங்கும்போது முக கவசம், கையுறை ஆகியவை அணிந்து வழங்க வேண்டும். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து உண்ணக்கூடாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News