ஆன்மிகம்
மருங்காபுரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கிய போது எடுத்த படம்.

மணப்பாறை பகவதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2019-04-09 08:45 IST   |   Update On 2019-04-09 08:45:00 IST
மணப்பாறை அருகே மருங்காபுரி பகவதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூக்குழி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 31-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு அக்னி குண்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டிய பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர்.

முன்னதாக பக்தர்கள் அக்னி சட்டியும் எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவை காண்பதற்காக சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே தண்ணீர் லாரிகளை நிறுத்தி பக்தர்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. 
Tags:    

Similar News