ஆன்மிகம்

மொடக்குறிச்சி கரிய காளியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-03-30 10:34 IST   |   Update On 2019-03-30 10:34:00 IST
மொடக்குறிச்சி கரிய காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மொடக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கரிய காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

விழாவையொட்டி 24-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, திங்கட்கிழமை காலை கொடிகட்டுதல், இரவு குதிரை துலுக்கு பிடித்தல், அம்மை அழைத்தல், கிடாய் துளுக்கு பிடித்தல், ஊஞ்சல் பாட்டு, சுவாமி திருவீதிஉலா நடந்தது.

கடந்த 27-ந் தேதி இரவு சுவாமி திருவீதிஉலா, 28-ந் தேதி சாமி ரதம் ஏறுதல், தேர் நிலை பெயர்தல் நடந்தது. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை தேர் நிலை சேர்க்கப்பட்டது.

இன்று (வெள்ளிக் கிழமை) மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்குதல், சாமி புகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று இரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

Similar News