ஆன்மிகம்

தெய்வ திருமணங்கள் நிகழ்ந்த பங்குனி உத்திரம்

Published On 2019-03-21 08:21 GMT   |   Update On 2019-03-21 08:21 GMT
தெய்வ திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன. இந்த நாளில் நடந்த தெய்வ திருமணங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தெய்வ திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன.

* மீனாட்சி-சுந்தரேசுவரர், முருகன்-தெய்வானை, ஆண்டாள்-ரங்கமன்னார், ராமர்-சீதா தேவி திருமணங்கள் பங்குனி உத்திர திருநாளில் நடந்தன.

* முருகனின் துணைவியான குறமகள் வள்ளி, அய்யப்பன், வில்வித்தையில் சிறந்தவரும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் ஆகியோர் பங்குனி உத்திரத்தன்று பிறந்தனர்.

* சிவபெருமான், தனது நெற்றிக்கண் கொண்ட நெருப்பினால் சாம்பலாக்கிய பின், ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை எழுப்பியதும் பங்குனி உத்திர நாளில்தான்.

* இந்திராணியை பிரிந்து, பின்னர் கடும் விரதம் மேற்கொண்ட தேவலோக அதிபதி இந்திரன் மீண்டும் மனைவியை அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

* மகாலட்சுமி உத்திர விரதத்தை அனுசரித்து தான் மகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றது பங்குனி உத்திர திருநாளில் தான்.

* 27 கன்னியர்களை தனது மனைவிகளாக சந்திரன் ஏற்றுக் கொண்டதும் பங்குனி உத்திர தினத்தில் தான்.

* காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.
Tags:    

Similar News