ஆன்மிகம்

ஆனந்தமான பலன் தரும் மஹோதயம்

Published On 2019-02-04 08:09 GMT   |   Update On 2019-02-04 08:09 GMT
எல்லா பஞ்சாங்கத்திலும் இன்றைய தை அமாவாசை (4.2.2019) “மஹோதயம்“ என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சிறப்பான மஹோதய அமாவாசை தினம் இந்த ஆண்டு வந்துள்ளது.
தை அமாவாசை திங்கட்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. எல்லா பஞ்சாங்கத்திலும் வருகிற தை அமாவாசை (4.2.2019) அன்று “மஹோதயம்“ என்று குறிப்பிட்டுள்ளது. மஹோதயம் என்றால் என்ன தெரியுமா?

வரும் அமாவாசை அன்று திங்கள்கிழமையும், திருவோண நட்சத்திரமும், வ்தீபாத யோகமும், சதுஷ்பாத கரணமும் சேர்ந்த நாளாகும். இத்தகைய சேர்க்கை பல ஆண்டுகளுக்கு ஒரு தடவையே நிகழும். இத்தகைய சிறப்பான மஹோதய அமாவாசை தினம் இந்த ஆண்டு வந்துள்ளது. எனவே அன்று சூர்யோதயத்துற்கு முன் சமுத்ரம், மஹாநதி, ஆறு, குளம் அல்லது கடைசி பக்கமாக கிணற்றிலோ சங்கல்பம் செய்து ஸ்நானம், வேதவித்துக்களுக்கு தானம், ஜபம், பூஜை, ஹோமம், பித்ரு தேவைகளுக்கு ஸ்ராத்தம் போன்ற கர்மங்கள் செய்வது ஆனந்தமான பலனைத் தரும்.

வருகிற தை அமாவாசை தினமானது கோடி சூரிய கிரகணத்திற்கு சமமானது என்று ரிஷிகள் கூறியுள்ளனர்.

பல மடங்கு புண்ணியம் தரும் இந்த மஹோதய அமாவாசை தினத்தன்று தென்மாவட்டத்துக்காரர்கள் திருப்புல்லாணி சேதுக்கரையில் நீராடலாம். சென்னை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் மகாபலிபுரம் கடலில் நீராடலாம். தை அமாவாசை தினத்தன்று காலை 8 மணிக்கு மகாபலிபுரம் அர்த்த சேதுவில் ஸ்தலசயனப் பெருமாள் தீர்த்தவாரி செய்ய உள்ளார். அதில் பக்தர்களும் பங்கேற்று புனித நீராடுவது மிகுந்த புண்ணியங்களைத் தரும்.
Tags:    

Similar News