ஆன்மிகம்

தை அமாவாசை: புனித நீராடுவோம்

Published On 2019-02-04 07:33 GMT   |   Update On 2019-02-04 07:33 GMT
தை அமாவாசை எனப்படும் புண்ணிய காலத்தில், இந்தப் புனிதமான நாளில், கடலில் ஸ்நானம் செய்வது விசேஷ பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
கடல் குளியல் எல்லா காலத்திலும் செய்யக் கூடாது என்று தெரிவிக்கின்றன ஞானநூல்கள். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கடல் நீராடுவது உத்தமம். தை அமாவாசை எனப்படும் புண்ணிய காலத்தில், இந்தப் புனிதமான நாளில், கடலில் ஸ்நானம் செய்வது விசேஷ பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல், கடல் மட்டுமின்றி நதி நீராடலும் நல்லன எல்லாவற்றையும் தந்தருளும் என்கின்றனர்.

ராமேஸ்வரம் கடல், திருப்புல்லாணி சேதுக்கரை, மாமல்லபுரம் முதலான இடங்களில், கடலில் நீராடினால், முன்னோருக்கு கடன் தீர்க்காத பாவங்கள் அனைத்தும் விலகி, புண்ணியங்கள் பெருகும்! முன்னோரின் ஆத்மா குளிர்ந்து, நம்மை, நம் குடும்பத்தை, சந்ததியை ஆசீர்வதிக்கும் என்பது ஐதீகம். நம் வாழையடி வாழையென தழைக்கும் என்பது உறுதி!

ஆகவே, தை மாத புண்ணிய கால அமாவாசையில், கடல் நீராடுங்கள். கடற்கரையில் தர்ப்பணம் செய்யுங்கள். இயலாத வர்கள், காவிரிக்கரைகளில், ஈரோடு பவானி கூடுதுறை, திருவையாறு காவிரிக்கரை முதலான புண்ணிய நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்யுங்கள்! எல்லா வளமும் நலமும் பெற்று, தோஷங்கள் அனைத்தும் விலகி, சந்தோஷமாக வாழ்வீர்கள்!
Tags:    

Similar News