ஆன்மிகம்

தை அமாவாசை: தானம் செய்யுங்கள்

Published On 2019-02-04 05:59 GMT   |   Update On 2019-02-04 05:59 GMT
தை அமாவாசை நாளில், வேதம் அறிந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் பசு தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம். இது நம் வாழ்வுக்கு பலம் சேர்க்கும்.
முக்கியமான நாட்களில், புண்ணியம் நிறைந்த நன்னாளில், தானங்கள் செய்வது, நம் வாழ்வுக்கு இன்னும் இன்னும் பலம் சேர்க்கும். தை அமாவாசை நாளில், வேதம் அறிந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் பசு தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

 சொர்ணம் எனப்படும் தங்கத்தை தானமாகத் தரலாம். எள் தானம் வழங்குங்கள். நெய் தானம் வழங்கலாம். வஸ்திரம் கொடுக்கலாம். நவதானியங்கள், வெல்லம், வெள்ளி, உப்பு, புத்தகம், பூஜை மணி, தீர்த்தப் பாத்திரம், பழங்கள், காய்கறிகள் முதலானவற்றை தானமாக வழங்கலாம்.

முக்கியமாக, தை அமாவாசை நாளில், நம்மால் முடிந்த அளவு யாருக்கேனும் ஒரு பொட்டலம் தயிர்சாதமாவது வாங்கிக் கொடுங்கள். பித்ருக்கள் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.
Tags:    

Similar News