ஆன்மிகம்

ஏகாட்சர மகாகணபதி கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது

Published On 2018-07-13 05:25 GMT   |   Update On 2018-07-13 05:25 GMT
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ஏகாட்சர மகாகணபதி கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ஏகாட்சர மகாகணபதி கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜையும், கணபதி ஹோமமும் நடக்கிறது. பின்னர் வேதாகம பாராயணம் நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஏகாட்சர மகாகணபதிக்கு முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி கேந்திர வளாகத்தில் மேள- தாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பக்தர்கள் தேங்காய்-பழம் படைத்து வழிபடுவார்கள்.

விழா ஏற்பாடுகளை விவேகானந்த கேந்திர துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானுதாஸ், பொருளாளர் அனுமந்தராவ், கேந்திர மூத்த ஊழியர் கிருஷ்ண மூர்த்தி, தலைமை அலுவலக செயலாளர் ரகுநாதன் நாயர், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீபத்மநாபன், வளாக பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்து உள்ளனர். 
Tags:    

Similar News