ஆன்மிகம்

விசாகம் நட்சத்திர வாழ்க்கை ரகசியம்

Published On 2018-05-28 08:10 GMT   |   Update On 2018-05-28 08:10 GMT
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான தருமங்கள் செய்வதில் வல்லவராக, வேண்டியவர், வேண்டாதவர் என பிரித்து பார்க்காதவராக இருப்பார்கள்.
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோராவது இடத்தை பெறுவது விசாக நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் அதிபதி தேவகுருவான குருபகவானாவார். இதன் 1, 2, 3ம் பாதங்கள் துலாம் ராசிக்கும், 4-ம் பாதம் விருச்சிக ராசிக்கும் உரியதாகும்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான தருமங்கள் செய்வதில் வல்லவராக, வேண்டியவர், வேண்டாதவர் என பிரித்து பார்க்காதவராக இருப்பார்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குணம் கொண்டவராகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைப்பார்கள். வசீகரமான முக அமைப்பும், கட்டாண உடல்வாகும் சிவந்த கண்களும் உடையவர்கள், மக்களிடம் அடக்கமாகவும் அன்பாகவும் பேசக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விசாக நட்சத்திரகாரர்கள் நல்ல கல்வி பெற்று, அறிவாற்றல் உடையவராக இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோவில் அறநிலையத்துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.
Tags:    

Similar News