ஆன்மிகம்

மூகாம்பிகை திருக்காட்சியளித்தல்

Published On 2018-05-23 12:08 IST   |   Update On 2018-05-23 12:08:00 IST
அமைதி தவழும் முகத்துடன் சாந்த சொரூபணியாக திருக்காட்சி அளித்து தானே இவ்வளவு காலமும் தங்க ரேகை உள்ள சுயம்பு லிங்கத்தில் அரூப ரூபமாய் இருந்த தாய் மூகாம்பிகை என தன்னை காண்பித்தாள்.
கொல்லூர் ஆலயத்தில் ஆதிசங்கரர் தங்கி இருந்த நாட்களில் தினசரி சுயம்புலிங்க சன்னதிக்கு நேர் பின்புறம் ஒரு மேடையில் அமர்ந்து தியானம் செய்து வந்தார்.

ஒருநாள் தியானத்தின் போது அன்னை மூகாம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் மேலிரு கரங்களில் வலது கரத்தில் சக்கரமும் இடது கரத்தில் சங்கும் கீழிரு கரத்தில் அபயவரத முத்திரையுடன் அமைதி தவழும் முகத்துடன் சாந்த சொரூபணியாக திருக்காட்சி அளித்து தானே இவ்வளவு காலமும் தங்க ரேகை உள்ள சுயம்பு லிங்கத்தில் அரூப ரூபமாய் இருந்த தாய் மூகாம்பிகை என தன்னை காண்பித்தாள்.

ஆதிசங்கரர் மிகவும் மனம் நெகிழ்ந்து தாயை வணங்கி துதித்துள்ளார். அதன்பிறகே ஆதிசங்கரர் அங்கு அமர்ந்து அன்னையைப் புகழ்ந்து சவுந்தர்ய லகிரியை இயற்றினார்.

Tags:    

Similar News