ஆன்மிகம்
வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது
திண்டிவனம் அருகே திருவக்கரையில் புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது.
திண்டிவனம் அருகே திருவக்கரையில் புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) வக்ர காளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் செல்வராசு, மேலாளர் ரவி, கோவில் குருக்கள் சேகர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் செல்வராசு, மேலாளர் ரவி, கோவில் குருக்கள் சேகர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.