ஆன்மிகம்

அன்பில் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-04-03 05:25 GMT   |   Update On 2017-04-03 05:25 GMT
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோவிலின் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று காலை 10 மணியளவில் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடியுடன் கோவிலை சுற்றி வலம் வந்தார். இதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் மாரியம்மனின் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வருகிற 9-ந் தேதி மாரியம்மனின் பிறந்த ஊராக கருதப்படும் நடராஜபுரத்தை அடுத்த மேட்டாங்காடு பகுதிக்கு சென்று ஊர் மரியாதை பெறுவார். இரவில் குதிரை வாகன புறப்பாடு நடைபெறுகிறது.

வருகிற 10-ந் தேதி கண்ணாடி பல்லக்கு ஊர்வலமும், 11-ந் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது. 12-ந் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விடையாற்றி நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

Similar News