ஆன்மிகம்
அளப்பன்கோடு கோவிலில் யானைகள் அணிவகுப்புடன் சாமி ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

அருமனை அருகே அளப்பன்கோடு கோவிலில் 14 யானைகளுடன் சாமி ஊர்வலம்

Published On 2017-01-02 11:52 IST   |   Update On 2017-01-02 11:52:00 IST
அருமனை அருகே அளப்பன்கோடு கோவிலில் பள்ளிவேட்டை திருவிழாவை முன்னிட்டு 14 யானைகளுடன் சாமி ஊர்வலம் நடந்தது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
அருமனை அருகே அளப்பன்கோட்டில் ஈஸ்வரகால பூதத்தான் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

திருவிழா நாட்களில் கோவில் சம்பந்தமான பூஜைகள் அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சிறப்பு பூஜைகள், பண்பாட்டு போட்டிகள், அன்னதானம், அலங்கார தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி பள்ளிவேட்டைக்கு புறப்படும் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் அளப்பன்பாறை தர்மசாஸ்தா கோவிலில் இருந்து 14 யானைகள் அணிவகுக்க புறப்பட்டன.

இதில், நெற்றிப்பட்டை அணிந்த 14 யானைகளுடன் முத்துக்குடை அணிவகுப்பு, சிங்காரி மேளம், பஞ்சவாத்தியம் போன்றவை இடம்பெற்றிருந்தன. ஊர்வலம் ஈந்திகாலை அண்டுகோடு, பன்றிபாலம், முக்கம்பாலை, மேல்புறம் சந்திப்பு வழியாக இரவு அளப்பன்கோடு கோவிலை சென்றடைந்தது. இரவு கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சி நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Similar News