ஆன்மிகம்

விராலிமலை முனியப்பசாமி கோவில் வருடாபிஷேக விழா

Published On 2016-09-08 14:11 IST   |   Update On 2016-09-08 14:11:00 IST
விராலிமலை முனியப்பசாமி கோவில் வருடாபிஷேக விழா நடந்தது.
விராலிமலை வடக்கு ரதவீதியில் உள்ள முனியப்பசாமி கோவில் மிகப்பழமையானதாகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு வேப்பமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வழிபட்டு வந்த முனியப்பசாமிக்கு கடந்த 2014ம் ஆண்டு திருப்பணிகள் செய்து வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் செய்யப்ட்டது.

கும்பாபிஷேகம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்ததையட்டி வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. காலையில் சன்னதியில் கடம் ஸ்தாபிக்கப்பட்டு ஹோம பூஜைகள் செய்து பூர்ணாகுதி நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் உபயதாரர்கள் நாகராஜன், மெய்யப்பன், நல்லசிவம், முருகேசன், அய்யப்பன், தீபன்சக்ரவர்த்தி, முரளிதரன், சங்கர், மாமுண்டி, சுந்தரம், ராமன், வெங்கடேசன், மணிவண்ணன், பூபாலன், பாலகிருஷ்ணன், பெரியசாமி, அழகர், சண்முகசுந்தரம் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஹோமம் அபிஷேகம் பூஜைகளை விஜய்விஸ்வநாத குருக்கள் சுப்பையா, பூஜாரி ஆகியோர் செய்தனர். விராலிமலை கருப்பையா குழுவினரின் நாதஸ்வர இசைக கச்சேரி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாககுழுவினர் செய்திருந்தனர்.

Similar News