ஆன்மிகம்
தங்களுடைய தகுதிக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், சிலர் விபரீத ஆசைகளுடன் அதை அடைவதற்கான முயற்சிகளில் இறங்கி விடுகின்றனர். அதுபோன்ற நிலையில், யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இறுதியில் அவர்கள் தங்களுடைய விபரீத ஆசைகளால் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக் கிறது. இதற்கு கடவுள்களும் விதிவிலக்கல்ல.
படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும் கூட திடீரென்று அப்படி ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது.
தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் என்று அனைவரும், சிவபெருமானை முதன்மைக் கடவுளாக வணங்கி வருவது பிரம்மாவிற்குப் பிடிக்கவில்லை. சிவபெருமானைப் போலவே, தனக்கும் ஐந்து தலைகள் இருக்கின்றன. அழிக்கும் கடவுளான சிவபெருமானை விட, படைக்கும் கடவுளான தனக்கே அதிக சக்தி இருப்பதாக நினைத்துக் கர்வம் கொண்டார். இதனால் அவர் யாரையும் மதிக்காமல் செயல்படத் தொடங்கினார்.
அவருடைய படைப்புத் தொழிலுக்குத் துணையாக இருந்தவர்கள் எவரையும் மதிக்காமல், அவர்கள் சொல்லும் எந்த ஆலோசனைகளையும் ஏற்காமல், தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்தார். இதனால் அவர் உருவாக்கிய பல படைப்புகளில் குறைபாடுகளும் வரத் தொடங்கின. அவருக்குத் துணையாகப் படைப்புத் தொழிலில் இருந்தவர்கள் சிலர் அவரிடம், அவருடைய படைப்புகளில் ஏற்பட்டு வரும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினர்.
தன் கீழாகப் பணிபுரிபவர்கள் தன்னுடைய படைப்புகளைப் பற்றிக் குறை கூறுவதா? என்று கோபமடைந்த பிரம்மா, அவர்களைப் பணியை விட்டு நீக்கினார். பணி இழந்தவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
சிவபெருமான் சிறிது நேரம் கண்களை மூடித் தியானித்தார். அவருக்குப் பிரம்மாவிடம் ஏற்பட்டிருக்கும் விபரீதமான ஆசையும், அதனால் ஏற்பட்ட கர்வமும், அதைத் தொடர்ந்து அவரது செயல்பாடுகளும் காட்சிகளாகக் கண் முன் வந்து நின்றன. பிரம்மாவின் விபரீத ஆசைக்குத் தன்னைப் போலவே, அவரிடமும் ஐந்து தலைகள் இருப்பதுதான் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டார். அவருடைய கர்வத்தை அடக்கி, அவருக்கு உண்மையை உணர்த்திட முடிவு செய்தார்.
சாபம்
சிவபெருமான் கயிலாயத்தில் இருந்தபடியே, ‘பிரம்மா, உடனே இங்கே வா’ என்று அழைத்தார். சிவபெருமான் அழைத்தது பிரம்மலோகத்தில் இருந்த பிரம்மாவின் காதில் சென்று ஒலித்தது. ஆனால், பிரம்மா அதைக் கண்டுகொள்ளாமல், ‘படைப்புக் கடவுளான தானே முதன்மையானவன் என்பதை இன்றே சிவபெருமானுக்கு உணர்த்திட வேண்டும்’ என்று நினைத்தார். எனவே, அவர் தன்னுடைய படைப்புத் தொழிலில் கவனம் செலுத்துவது போல் இருந்து கொண்டார்.
இதைக்கண்ட சிவபெருமான் கோபமடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு பிரம்மலோகம் வந்தார். அப்போதும், பிரம்மா அவரைக் கண்டுகொள்ளாமல் தனது படைப்புத் தொழிலைச் செய்வது போல் பாவனைக் காட்டினார். பிரம்மாவின் அலட்சியம் சிவபெருமானுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘பிரம்மனே! எனக்கு இருப்பது போல் உனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால்தானே உனக்கு கர்வம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்போதே உன் ஐந்தாவது தலையைத் துண்டிக்கிறேன்’ என்றபடி பிரம்மனின் ஒரு தலையைத் துண்டித்துத் தூக்கி வீசினார்.
பின்னர், ‘பிரம்மனே! நீ தற்பெருமையின் பிடிக்குள் ஆட்பட்டு விட்டாய். உன்னை என்னுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீயாகப் பெருமை அடைந்தது மட்டுமின்றி, உன்னை முதன்மைக் கடவுளாக அனைவரும் வணங்கிட வேண்டும் என்கிற விபரீத ஆசையையும் வளர்த்துக் கொண்டாய். என்னை எதிர்க்கவும் துணிந்தாய். அதனால் உன் தலைகளில் ஒன்றை இழந்தாய். உன்னிடம் இருக்கும் படைப்பாற்றல் திறன் ஒன்றை மட்டுமே நீ பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதால், உன்னுடைய படைப்பாற்றல் திறன் உன்னை விட்டு விலகட்டும். படைப்பாற்றல் திறனை இழந்த நீ, பூலோகம் சென்று மிகச் சாதாரண மனிதனாக வாழ்ந்து அவதிப்படுவாய்’ என்று சாபம் கொடுத்தார்.
அனைத்தையும் இழந்த பிறகே பிரம்மா தன் தவறை உணர்ந்தார். அவர் சிவபெருமானிடம், தன்னை மன்னித்துத் தனது துண்டித்த தலையுடன் படைப்பாற்றல் திறனையும் சேர்த்து வழங்கிட வேண்டி நின்றார்.
அவருடைய பணிவான வேண்டுகோளில் கோபம் குறைந்த சிவபெருமான், ‘பிரம்மா! உனது பணியைச் சிறப்பாகச் செய்து முதன்மையடையாமல், தேவையற்ற ஒப்பீடு செய்து, உன் தலையுடன் பொறுப்பை இழந்து விட்டாய். உனக்கு இனி ஐந்தாவது தலை கிடைக்கப் போவதில்லை. நீ பூலோகம் சென்று சாதாரண மனிதனாக வாழ்ந்து வரும் காலத்தில், பல துன்பங்களுக்கு ஆளாவாய். அதன் பின்னர் என் மனம் மகிழ வழிபாடு செய்து, உன்னுடைய படைப்பாற்றல் திறனைத் திரும்பப் பெற்றுக்கொள்’ என்று சாப விமோசனத்தை அளித்துக் கைலாயம் திரும்பினார்.
விமோசனம்
பூலோகத்திற்கு வந்த பிரம்மன் சாதாரண மனித உருவிற்கு மாற்றமடைந்தார். அவருக்குத் தான் படைப்புக் கடவுள் என்பதே மறந்து போனது. மனிதனாக இருந்த அவருக்குப் பல துன்பங்கள் வந்து சேர்ந்தன. அந்தத் துன்பங்களில் இருந்து மீளமுடியாமல் பெரும் அவதியுற்றார். இப்படியே பல ஆண்டுகள் உருண்டோடின. அப்போது பூலோக மக்கள் அனைவரும் தங்கள் துன்பம் நீங்க, கோவில்களில் இறைவனை வழிபடுவதைக் கண்டார்.
இதையடுத்து பிரம்மாவும், அங்கிருந்த ஒரு சிவாலயத்தில் தன்னுடைய துன்பங்கள் நீங்க அருள் புரியும்படி வேண்டினார். அந்த தருணத்தில், அவருக்குத் தான் படைப்புக் கடவுள் என்பதும், சிவபெருமான் கொடுத்த சாபத்தினால் படைப்புத் திறனை இழந்ததும் நினைவுக்கு வந்தது.
அதன் பின்னர் அவர் தான் செல்லும் இடங் களில் எல்லாம், சிவலிங்கத்தை நிறுவி, தன்னுடைய சாபம் நீங்க அருள்புரியும்படி வழிபாடு செய்யத் தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக திருப்பட்டூர் எனும் இடத்தில் அருகருகே, 12 லிங்கங்களை (இவை துவாதச லிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன) நிறுவி வழிபாடு செய்தார். அவருடைய வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குக் காட்சி யளித்தார்.
அவரைக் கண்டு வணங்கிய பிரம்மாவிடம், ‘பிரம்மனே! உன் வழிபாட்டில் மனம் மகிழ்ந்தேன். என் சாபத்தால் நீ இழந்த உனது படைப்பாற்றல் திறன் மீண்டும் உன்னை வந்தடையும். இனி நீ உன் படைப்புத் தொழிலை மீண்டும் செய்திடலாம்’ என்றார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த பிரம்மா, ‘இறைவா! நான் தங்களை வழிபட்ட இந்த இடத்தில், தாங்கள் அன்னையுடன் இருந்து அருள் புரிய வேண்டும். இங்கு வந்து வழிபடுபவர்களது துயரங்களை நீக்கி, அவர்களுக்கு நற் பலன்களை அளித்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.
இதைக் கேட்ட சிவபெருமான் சக்தியுடன் சேர்ந்து காட்சியளித்து, ‘பிரம்மனே! உன் விருப்பப்படி இங்கு கோவில் கொள்ளும் நான் உன் பெயரையும் சேர்த்து பிரம்மபுரீஸ்வரர் என்றும், அம்பாள் பிரம்ம சம்பத் கவுரி என்றும் அழைக்கப்படுவோம். எங்களை வணங்கிச் சாப விமோசனம் பெற்ற உனக்கும் இங்கு தனிச் சன்னிதி ஒன்றும் அமையும். உன்னை வணங்குபவர்களுக்கு அவர்களுடைய விதியை மாற்றி, அவர்களுக்கு நற்பலன்கள் அளிக்க அருளும் வாய்ப்பையும் உனக்கு அளிக்கிறேன்’ என்றார்.
இதனைக் கேட்டு மகிழ்ந்த பிரம்மன் இருவரையும் வணங்கி, அவர்களிடமிருந்து விடை பெற்றுப் பிரம்மலோகம் சென்று, தனது படைப்புத் தொழிலை மீண்டும் கவனிக்கத் தொடங்கினார்.
தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பேராசையில் பலரும் தவறு களைச் செய்யத் துணிந்து விடுகின்றனர். முடிவில், அந்தத் தவறுக்கான தண்டனையைப் பெறும் போது, இருப்பதையும் இழந்து அவதிப்பட வேண்டியதாகி விடுகிறது என்பதை பிரம்மாவிற்குக் கிடைத்த சாபமும் விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.