கோவில்கள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

புற்று வடிவத்தில் அருள்பாலிக்கும் அம்மன் கோவில்

Published On 2022-04-29 12:34 IST   |   Update On 2022-04-29 12:34:00 IST
இந்த ஆலயம் ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப்போலவே, பெண்கள் இங்கு இருமுடி கட்டிச் செல்வார்கள்.
மூலவர்: பகவதி அம்மன்

தல விருட்சம்: வேம்பு

புராணப் பெயர்: மந்தைக்காடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கேரள பாணியில் ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் கூடிய எளிமையான ஆலயம் இதுவாகும்.

இந்த ஆலயத்தை கேரளப் பகுதியை ஆட்சி செய்த மார்த்தாண்டவர்மன் என்ற மன்னன் கட்டமைத்துள்ளான்.

இந்த ஆலயம் ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப்போலவே, பெண்கள் இங்கு இருமுடி கட்டிச் செல்வார்கள்.

கருவறைக்குள் தரையில் பதிக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மேல்தான் புற்று வளர்ந்திருக்கிறது. இது தொடர்ந்து வளர்ந்துகொண்டே செல்வதாக சொல்லப்படுகிறது.

கருவறையில் 15 அடி உயரம் வளர்ந்து, மேற்கூரையை முட்டி நிற்கும் புற்றுதான், பகவதி அம்மனாக வழிபடப்படுகிறது.

புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் மூலவர் முன்பாக, வெண்கலச் சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச் சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதி அம்மன் அருள்கிறார்.

இத்தல அம்பாளுக்கு, காலை வேளையில் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அன்னைக்கு புட்டமுது பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் கொண்டு ‘மண்டையப்பம்’ செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்தால் தலைவலி குணமாகும் அதிசயம் நிகழ்கிறது.

இங்கு நடைபெறும் மாசி மாத திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கன்னியாகுமரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கிறது.

Similar News