கோவில்கள்
அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில்

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில்

Published On 2022-04-27 07:05 IST   |   Update On 2022-04-27 07:05:00 IST
இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் “குற்றம் பொறுத்தநாதர்”, “அபராதமேஸ்வரர்” என்கிற பெயரிலும், அம்பாள் “கோல்வளை நாயகி” என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இது இருக்கிறது. இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் “குற்றம் பொறுத்தநாதர்”, “அபராதமேஸ்வரர்” என்கிற பெயரிலும், அம்பாள் “கோல்வளை நாயகி” என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். கோவிலின் தல விருட்சமாக கொடிமுல்லை இருக்கிறது. கோவிலின் தீர்த்தம் சூர்ய புஷ்கரணி, இந்திர தீர்த்தம், பொற்றாமரை என்கிற பெயர்களில் அழைக்கப்படுகிறது. புராணகாலத்தில் இவ்வூர் கருப்பறியலூர், கர்மநாசபுரம் என அறியப்பட்டது. தேவாரம் பாடல் பெற்ற சிவதல தலமாக இக்கோவில் இருக்கிறது.

தல புராணங்களின் படி இலங்கை வேந்தன் இராவணனின் மைந்தன் மேகநாதன் தேவலோக வேந்தனான இந்திரனை வெற்றி கொண்டு மேகநாதன் என்கிற பெயர் பெற்றான். ஒரு முறை படிக விமான பறந்து கொண்டு கொண்டிருந்த போது அந்த விமானம் தடை ஏற்பட்டு யே நின்று விட்டது. இதை கண்ட இந்திரஜித் விமானத்திற்கு கீழே பார்த்தபோது இத்தல சிவபெருமானின் கோபுரத்தின் மீது பறந்ததால் தான் இத்தடை ஏற்பட்டது என எண்ணி வருந்தினான். பிறகு தலத்தில் இறங்கி, இக்கோவிலின் குளத்தில் நீராடி தனது தவறை உணர்ந்து சிவபெருமானை வழிபட அந்த தடை நீங்கியது.

பிறகு அவனின் விமானம் தடையில்லாமல் பறக்க ஆரம்பித்தது. இக்கோவிலின் சிவலிங்கத்தின் அழகில் மயங்கிய மேகநாதன், இந்த சிவலிங்கத்தை பெயர்த்து இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அந்த முயற்சியில் தோல்வியுற்று மயங்கி விழுந்தான். இதைக் கேள்விப்பட்ட இலங்கை வேந்தன் இராவணன் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானிடம் தன் மகனின் தவறுக்கு வருந்தி அவனை மன்னிக்குமாறு வேண்டினான். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் இந்திரஜித்தின் குற்றத்தை பொறுத்து அருள் புரிந்ததால் “குற்றம் பொறுத்த நாதர்” என்கிற பெயர் இத்தல சிவ பெருமானுக்கு ஏற்பட்டது.

சித்திராங்கதன் எனும் மன்னன் தனது மனைவி சுசீலை உடன் இத்தலத்திற்கு வந்து குழந்தை பாக்கியம் வேண்டி வழிபட்டான். அதன்படியே அவனுக்கு குழந்தை பாக்கியம் உண்டாயிற்று. இத்தலத்தில் சூரிய பகவான் வழிபட்டதால் இத்தலம் தலைஞாயிறு எனப் பெயர் பெற்றது. இத்தலத்தில் செய்யப்படும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என பிரம்மதேவன் வசிஷ்டருக்கு கூறினார். இதனால் வசிஷ்டர் இங்கே சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு மெய்ஞ்ஞானம் பெற்றார். 72 ரிஷிகள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதாக தல புராணங்கள் கூறுகின்றது. இத்தலத்திற்கு வந்து வழிபடும் எவருக்கும் அடுத்த பிறவி இருக்காது என்று கூறப்படுகிறது அவர்கள் சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்றும், மீண்டும் பிறவாமை பேறு கிடைத்து விடுவதாக ஐதீகம் அதனால் தான் இத்தலம் கருப்பறியலூர் என அழைக்கப்படுகிறது. அனுமனின் தோஷத்தை நீங்கிய தலம் இதுவாகும்.

இக்கோவிலின் இறைவன் சிவபெருமானின் லிங்கம் ஒரு சுயம்பு மூர்த்தியாகும். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார். சீர்காழி சட்டை நாதர் கோவில் அமைப்பை போலவே இக்கோவிலும் மலைக்கோவில் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இத்தலத்தை மேலைகாழி என அழைக்கின்றனர். கோவிலின் முதல் தளத்தில் உமாமகேஸ்வரர், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் விட்டிருக்கிறார்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்கள், ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல தட்சிணாமூர்த்திக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோவில் நடை திறப்பு

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.

கோவில் முகவரி

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில்
தலைஞாயிறு
நாகப்பட்டினம் மாவட்டம் - 614712

Similar News