ஆன்மிகம்
ஸ்வர்ண ஹர்ஷண பைரவர்

பிரமிப்பூட்டும் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில்- ஈரோடு

Published On 2019-12-09 07:51 GMT   |   Update On 2019-12-09 07:51 GMT
ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக, ஈரோடு மாவட்டத்தில் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில் உருவாகி வருகிறது.
ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக, ஈரோடு மாவட்டத்தில் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில் உருவாகி வருகிறது. தமிழகத்தில், பைரவருக்கு ஒரு சில இடங்களில் தனிக்கோவில்கள் உள்ளன. ஆனாலும், ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில், ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையை அடுத்த, ராட்டை சுற்றிப்பாளையம் கிராமத்தில், பல சிறப்புகளுடன் ஒரு ஏக்கர் பரப்பளவில், உருவாகி வருகிறது.

கோவில் என்றாலே, ராஜகோபுரம் தான் பிரமாண்டமாக இருக்கும். இங்கு ராஜகோபுரத்துக்குப் பதில், 33 அடி உயரத்தில் பிறந்த மேனியாக கால பைரவர் சிலை வடிவமைக்கப்படுகிறது.

மேலும், 125 அடி நீள கலை நயமிக்க மண்டபம், அதை சுற்றிலும், 63 பைரவர்கள் வீற்றிருக்கும் வகையிலும், கர்ப்பகிரக கோபுரம், பிரமிடு முறையிலும் உருவாக்கப்படுகிறது.

பிரமாண்ட கோவிலை, அமைத்து வரும், விஜய் சுவாமிகள் கூறியதாவது:

அடிக்கடி கனவில் பைரவர் தோன்றியதால், நாம் ஏன் பைரவருக்கு கோவில் கட்டக்கூடாது என்கிற எண்ணம் தோன்றியது. அதன் வெளிப்பாடு தான், ஐந்து ஆண்டுகளாக தனி மனிதனாக நின்று கோவில் கட்டும் பணிகளில் போராடி வருகிறேன். என் பணிகள் பாதி முடிந்தன.

உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணியர் கண்டுகளிக்கவும், பக்தர்கள் வணங்கும் கோவிலாகவும், கால பைரவர் கோவில் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News