ஆன்மிகம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
சென்னை அருகே பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில், அம்மன் பக்தர்களை பெருமளவில் வெகுவாக ஈர்க்கிறது.
சென்னை அருகே பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில், அம்மன் பக்தர்களை பெருமளவில் வெகுவாக ஈர்க்கிறது. பவானி அம்மனே இக்கோயிலின் பிரதான தெய்வம், வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.
சென்னையில் இருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெரியபாளையத்தை சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையிலுள்ள செங்குன்றத்திலிருந்து மிக எளிதில் அடையலாம். மேலும், ஆவடி, திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளிலிருந்தும், பெரியபாளையம் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது.
ஆண்டு முழுவதும், அம்மனின் அருள் வேண்டி இக்கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். குறிப்பாக, பவானி அம்மனைத் தரிசிக்க, வார இறுதி நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர். பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்வதற்காக, கோயில் நிர்வாகம் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். மேலும், கோயிலை நன்றாகப் பராமரித்தும் வருகிறார்கள்.
பக்தர்கள், பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.
பெரியபாளையம் கோவில் உள்ள இடம் ஆதி காலத்தில் புற்று மேடாக இருந்த இடமாகும். பவானி அம்மன் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் திருவிளை யாடல் நடத்தி, தான் அங்கு இருப்பதை இந்த உலகுக்கு உணர்த்தினாள். அதன் பிறகே புற்று இருந்த இடத்தில் பாளையத் தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது.
இத் திருக்கோயில், சமீபத்தில் மறுசீரமைக்கப் பட்ட பிறகு, பவானி அம்மன் மிகவும் ஜொலிப்பதாக பக்தர்கள் பரவசப்படு கின்றனர். நாம் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன், விநாயகர் தனிச்சன்னதியில் ஸ்ரீஅற்புத சக்தி விநாயகர் என்ற திருநாமம் கொண்டு அருள் புரிவதைக் காணலாம். இதை ஒட்டி, ஸ்ரீ சர்வ சக்தி மாதங்கி அம்மன் சன்னதி உள்ளது.
அடுத்து, நாம், பவானி அம்மனைத் தரிசிப்பதற்கான வரிசையை சென்றடையலாம். கட்டணமில்லாத் தரிசனம் மற்றும் சிறப்புக் கட்டணத் தரிசனம் நடைமுறையில் உள்ளது. அம்மனை மிகவும் அருகாமையிலிருந்து தரிசிப்பதற்கு சிறப்புக் கட்டணத் தரிசனம் சிறந்தத் தேர்வாகும். மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.
மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தால், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து அருள் புரியும் உற்சவர் அம்மன் நம்மை வரவேற்பதைக் காணலாம். குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.
அம்மன் தரிசனத்தை சிறப்பான முறையில் முடித்து விட்டு வரும் வழியில், வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர் (விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) மற்றும் நாகர் ஆகிய சன்னிதிகளைத் தரிசிக்க முடியும். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்து பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் பல வழிகளில் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.
மங்களத் தாலி
பெரியபாளையத்தமன்னை குல தெய்வமாக கருதும் பக்தர்கள் தங்கள் திருமணத்தில் ஒரு புதிய சடங்கை வைத்திருக்கிறார்கள். அதன்படி திருமணநாள் அன்று கட்டிய தாலியை அம்பிகைக்கு காணிக்கையாக்குகின்றனர். பிரதியாக அன்னையின் அருள்மிகு மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்று அதை அம்பிகையின் வரப்பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். இன்றும் இதைக் காணலாம். இப்படிச் செய்தால் அந்தக் குடும்பம் செழித்து, தழைத்து, ஓங்குவதுடன் கட்டிய கணவனுக்கு நீண்ட ஆயுளையும் பவானி வழங்குவாள் என்பது நம்பிக்கை.
ஆடி பெரு விழா நிகழ்ச்சி
ஆடி 18 (3-8-19) ஆடிப்பூரம். 108 பால் குடம்.
ஆடி 19 (4-8-19, ஞாயிறு) 3-ம் வாரம். மாலை 4 மணிக்கு நாக வாகனத்தில் அனந்த சயனத்தில் அம்மன் வீதி உலா.
ஆடி 26 (11-8-19 ஞாயிறு) 4-ம் வாரம்
மாலை 4 மணிக்கு ‘சிம்ம வாகனத்தில்’ பவானி அம்மன் மகிஷா சூரமர்த்தினி அலங்கா ரத்தில் திருவீதி உலா.
ஆவணி 1 (18-8-19 ஞாயிறு) 5-ம் வாரம்
மாலை 4 மணிக்கு ‘அன்ன வாகனத்தில்’ பவானி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் திருவீதி உலா.
ஆவணி 8 (25-8-19 ஞாயிறு) 6-ம் வாரம்
மாலை 4 மணிக்கு காமதேனு வாகனத்தில் பவானி அம்மன் கெஜ லட்சுமி அலங்கா ரத்தில் திருவீதி உலா.
ஆவணி 15 (1-9-19 ஞாயிறு) 7-ம் வாரம்
மாலை 4 மணிக்கு கிளி வாகனத்தில் பவானி அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா.
ஆவணி 16 (2-9-19 திங்கள்) விநாயகர் சதுர்த்தி விழா
மாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத் தில் திருவீதி உலா நடைபெறும்.
ஆவணி 22 (8-9-19 ஞாயிறு) 8-ம் வாரம்
மாலை4 மணிக்கு கஜ வாகனத்தில் பவானி அம் மன் சூரிய அலங்காரத்தில் திருவீதி உலா .
ஆவணி 29 (15-9-19 ஞாயிறு) 9-ம் வாரம்
மாலை 4 மணிக்கு ‘சந்திர பிரபையில்’ உற்சவர் பவானி அம்மன் பார்வதி அலங்காரத்தில் திருவீதி உலா .
புரட்டாசி 5 (22-9-19 ஞாயிறு) 10-ம் வாரம்
மாலை 4 மணிக்கு ‘சூரிய பிரபையில்’ உற்சவர் பவானி அம்மன் காமாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா .
புரட்டாசி 12 (29-9-19 ஞாயிறு) 11-ம் வாரம்
மாலை 4 மணிக்கு ‘அன்ன வாகனத்தில்’ பவானி அம்மன் பத்மாசனி அலங்காரத்தில் திருவீதி உலா.
புரட்டாசி 19 (6-10-19 ஞாயிறு) 12-ம் வாரம்
மாலை 4 மணிக்கு ‘சந்திர பிரபையில்’ பவானி அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் திருவீதி உலா .
புரட்டாசி 21 (8-10-19 செவ்வாய்)
மாலை 6-8 மணிக்கு விஜய தசமியை முன்னிட்டு விசேஷ ஹோமங்கள், பூர்ணாஹ¨தி, சோடச தீபாராதனை, பரிவேட்டை உற்சவம் . உற்சவர் பவானி அம்மன் ‘குதிரை வாகனத்தில்’ திருவீதி உலா .
புரட்டாசி 26 (13-10-19 ஞாயிறு) 13-ம் வாரம்
மாலை 4 மணிக்கு ‘சூரிய பிரபையில்’ பவானி அம்மன் காயத்திரி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.
ஐப்பசி 3 (20-10-19 ஞாயிற்றுக்கிழமை) 14-ம் வாரம்
மாலை 4 மணிக்கு ‘குதிரை வாகனத்தில்’ பவானி
அம்மன் திருவீதி உலா.
அம்மனை வழிபடும் சூரியன்
பெரிய பாளையத்து அன்னையை ஆண்டுக்கு ஒருமுறை சூரியன் வழிபாடு செய்யும் நிகழ்ச்சி காணவேண்டிய ஒன்று. ஆடிப்பெருவிழா ஆடி முதல் ஞாயிறு அன்று தொடங்கி 14 ஞாயிற்றுக்கிழமைகள் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பத்தாவது ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை அன்னை யின் சிரசிலிருந்து பாதம் வரை சூரிய கதிர்கள் படுகின்றது. இந்த நிகழ்வு 22-9-19 அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் சூரியபகவான் அன்னையை பத்தாவது வாரம் பூஜிப்பதை பக்தர்கள் காணலாம். இப்பூஜையை கண்டால் இம்மையில் இன்பமும், மறுமையில் பிறவா நெறியும் உண்டு என்பது வேதங்கள் கூறும் விளக்கமாகும்.