ஆன்மிகம்

சிவராத்திரி தலங்கள்

Published On 2019-03-04 02:29 GMT   |   Update On 2019-03-04 02:29 GMT
சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.
சிவராத்திரி தினத்தன்று விரதம் இருந்து அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது நல்லது. அப்பொழுது சிவபெருமானுடைய நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சிறந்தது. சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.

காஞ்சீபுரம்:- பார்வதி தேவியார் விளையாட்டாக சிவபெரு மானின் கண்களைப் பொத்தியதால் சிவபெரு மானால் சாபம் பெற்று தவம் முழுமை அடையாததால் திருவண்ணாமலையில் தவம் செய்து இடப்பாகம் பெற்றார். இவ்வரலாற்றை காஞ்சிபுராணம் மிக விரிவாகக் கூறுகிறது. இந்நிகழ்வு சிவராத்திரி அன்று நடந்தது. காஞ்சியின் ஒரு பகுதி உருத்திரச் சோலை எனப்பட்டதாகவும் காஞ்சிபுராணம் கூறுகிறது. காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரரைச் சிவராத்திரி அன்று வழிபட்டு அருளை பெறுவோமாக.

ஸ்ரீசைலம்:- சிவ மகா புராணத் தில் கூறப்பட்ட வேடன் கதை நடந்த இடம் ஸ்ரீசைலம் ஆகும். இங்கே நந்திதேவர் மலை உருவில் வீற்றிருக்கின்றார். காஞ்சியில் மர உருவிலும் திருவண்ணாமலையில் மலை உருவிலும் சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல ஸ்ரீசைலத்தில் மலை உருவில் நந்திதேவர் எழுந் தருளியுள்ளார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் சொல்வார்கள். இது 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்று. சிவராத்தி யன்று இங்குள்ள பாதாளகங்கை என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தரிசித்தால் எல்லா நலன்களும் பெற்று இன்பம் அடையலாம்.

ஓமாம்புலியூர்:- சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத் தின் உட்பொருளை உபதேசித்த தலம் ஓமாம் புலியூராகும். சிவமகா புராணத்தில் சொல்லப்பட்ட வேடன் கதை போன்ற ஒரு கதை இங்கும் உண்டு. சிவராத்திரியின் பெருமையை விளக்குகிறது. இந்த ஊரினை பிரணவ வியாக்ரபுரம் என்றும் கூறுவர். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.

திருக்கழுக்குன்றம்:- செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஊர் திருக்கழுக்குன்றமாகும். இவ்வூரை உருத்திரகோடி என்பார்கள். கோடி உருத்திரர்கள் சிவராத்திரி அன்று சிவபூஜை செய்து அருள் பெற்றதால் இது உருத்திரகோடி எனப் பெயர் பெற்றதாம். இக்கோவிலில் சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்தால் கோடிருந்திரர்கள் பெற்ற அருள் நமக்கு கிடைக்கும்.

திருக்காளத்தி:- இங்குள்ள மலைக் கோவிலில் சிவராத்திரி நாளில் தேரில் காளத்திநாதர் பவனி வருகிறார். தேரோட்டம் திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை முதலிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோகர்ணம், தேவிகாபுரம் ஆகிய சிவத்தலங்களிலும் சிவ ராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காவிரி கரையில் திருவிசலூர் என்னும் தலம் ஒன்று உள்ளது. இத்தலத்தில் மகா சிவராத்திரி இரவில் அகத்தியர் சுவாமியை பூசித்தார் என்று டாக்டர் உ.வே.சுவாமிநாதய்யர் கூறியுள்ளார். சிவராத்திரி அன்று கண் விழித்து சிவபுராணம், தேவாரம் முதலிய நூல்களை முற்றோதி எல்லா நலன்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக.

ஹரித்துவாரமங்கலம்:- இங்கு ஸ்ரீபாதாளேஸ்வரர் ஆலயம் உள்ளது. தஞ்சைக்கு கிழக்கே அம்மாப்பேட்டை வழியில் 22 கி.மீட்டர் செல்ல வேண்டும். திருமால் வராக அவதாரத்தில் பாதாளம் செல்லும் பொருட்டு பள்ளம் பறித்த இடமாகும். செருக்கு மிக்கவராகிய வராக மூர்த்தியின் கொம்பை முறித்து சிவபெருமான் ஆபரணமாக தரித்த தலம். சிவஅருள் கிடைக்கும்.

ஸ்ரீபட்டீஸ்வரம்:- ஆலயம் கும்பகோணத்துக்கு தென்மேற்கே ஆவூர் சாலையில் 6 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. காமதேனு வின் புதல்வி வழிபட்டதலம் துர்க்கை வெகு பிரசித்தம். விசுவாமித்ரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற பதி, சிறு வயதினரான ஞானசம்பந்தரை சிவபெருமான் முத்துப்பந்தல் அமைத்து வரவேற்ற தலம். ஞானசம்பந்தர் தரிசனம் செய்ய நந்திகள் விலகியிருந்த பதி. இத்தலத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கப்பெறலாம்.

கும்பகோணம்:- இங்கு ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பகோணம் கோயில் குளம் கொண்டது. கோவிந்த தீட்சிதர் திருப்பணி செய்த பெருமை பெற்ற பதி. பிரளயக் காலத் துக்குப்பின் அமுத குடத்தின் மூக்கு விழுந்த இடமாகும். சிவனிடம் கேட்ட வரம் இங்கு கிடைக்கும்.

திருப்புறம்பியம்:- ஸ்ரீசாட்சிநாதேஸ்வரர் ஆலயம், கும்பகோணத்திற்கு வடமேற்கு 10-வது கி.மீட்டரில் அமைந்துள்ளது. பாம்பு கடித்து இறந்து போனவனை ஞானசம்பந்தர், உயிர்ப்பித்த தலமாகும். சிவபெருமான் ஓர் செட்டிப்பெண்ணை அவள் மணக்க இருந்த மாமனை உயர்ப்பித்து அவர்கள் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த தலம். மதுரை திருவிளையாடல் 64 உடன் தொடர்புடையது.

சாக்கோட்டை:- குடந்தையில் இருந்து தென்கிழக்கே 4 கி.மீட்டர் தூரத்தில் சாக்கோட்டை ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது கோட்டை சிவன் கோவில் எனப்படும். பிரளயத்தின்போது உயிர்கள் பாதுகாப்பாக இருந்த கலயம் தங்கிய பதியாகும். இங்கு வழிபட்டால் உடல்நல கோளாறுகள் விலகும்.

திருவிடைமருதூர்:- கும்பகோணத்துக்கு வ டகிழக்கே 8-வது கி.மீட்டரில் திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங் கேஸ்வரர் ஆலயம் உள்ளது. வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய பதி (மதுரை திரு விளையாடலோடு தொடர்பு கொண்ட தலம்) பேய், பைத்தியம், நீங்கும் தலம், மவுனமாக தவம் செய்த மூகாம்பிகை உள்ள பதி. சிவபெருமான் தன்னையே அர்ச்சனை செய்து கொண்ட திருத்தலமாகும்.

திருப்பனந்தாள்:- கும்பகோணத்துக்கு வடகிழக்கே 16-வது கி.மீட்டரில் ஸ்ரீதாலவரனேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஒரு பக்தரின் நிலைக்கு இரக்கப்பட்டு சிவ பெருமானே முடி சாய்த்து மாலை ஏற்ற பதியாகும். சாய்ந்த லிங்கமானது பிற்பாடு குங்கிலியக் கலிய நாயனரால் நிமிர்த்தப்பட்டது. சரிந்த வாழ்வை இத்தல வழிபாடு நிமிரச் செய்யும்.
Tags:    

Similar News