ஆன்மிகம்

லட்சுமியை வரவழைக்க மிக எளிய பிரார்த்தனை ஸ்லோகம்

Published On 2019-06-01 06:37 GMT   |   Update On 2019-06-01 06:37 GMT
செல்வத் திருமகளான மகாலட்சுமியை வழிபட இந்த பிரார்த்தனை ஸ்லோகம் தரப்பட்டுள்ளது... இதனை படித்து பலன் பெறுங்கள்.
செல்வத் திருமகளான மகாலட்சுமியை வழிபட இந்த பிரார்த்தனை தரப்பட்டுள்ளது...

மகாலட்சுமி தாயே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! சங்கு, சக்கரம் தாங்கியவளே! பாற்கடல் வாசனின் மனத்தாமரையில் குடியிருப்பவளே! உன்னை வணங்குகிறேன். வேண்டும் வரங்களை அருள்பவளே! மூவுலகத்தையும் பரிபாலனம் செய்பவளே! பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவளே! அச்சம் தீர்ப்பவளே! நல்லோரைக் கரை சேர்ப்பவளே! ஸ்ரீதரனின் துணைவியே! திருமகளே! உன்னைப் போற்றுகிறேன். அறிவின் இருப்பிடமே! அன்பர்களுக்கு வழிகாட்டு பவளே! செயல்களில் வெற்றியைத் தருபவளே! மந்திர வடிவமானவளே! பக்திக்கும், முக்திக்கும் வழிகாட்டுப வளே! என்றென்றும் என் இல்லத்தில் இருந்து நீயே என்னைக் காத்தருள வேண்டும்.

முதலும் முடிவும் அற்றவளே! மாயோனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளே! ஆதிலட்சுமித் தாயே! அனைத்திற்கும் ஆதாரமே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! வாழ்வின் பண்பும் பயனுமாக இருப்பவளே! ராஜயோகம் தந்தருள்பவளே! தாயே! அருள்புரிவாயாக.

செந்தாமரைப்பூவில் விரும்பி உறைபவளே! பட்டாடை, பலவித ஆபரணங்களையும் விருப்பத்துடன் அணிபவளே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் வீற்றிருப்பவளே! ஜகன்மாதாவே! குளிர்ந்த சந்திரன் போல அருட்பார்வைகொண்டவளே! அபயக்கரம் நீட்டி என்னை ஆட்கொள்ள வருவாயாக.

மாசில்லாத தூயநெஞ்சில் வாழ்பவளே! யாவராலும் விரும்பி வணங்கப்படுபவளே! மங்கல வடிவானவளே! பசுவின் அம்சமாக திகழ்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! செக்கச் சிவந்தவளே! தூய்மை நிறைந்தவளே! உன் திருவடித் தாமரைகள் என் வீட்டில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

அமுதம் நிறைந்த பொற்குடத்தை ஏந்தியவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் உறையும் ஒளியே! சிவந்த இதழ்களைக் கொண்ட இளமயிலே!அலங்கார ரூபிணியே!உன் அருட்பார்வையால் இவ்வுலகை வளம் பெறச் செய்வாயாக.

பூங்கொடி போன்றவளே! எங்கும் நிறைந்தவளே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! அலைகடலில் உதித்த அருட் பாவையே! சரணடைந் தவர்களைக் காக்கும் ஜகன் மாதாவே! அஷ்ட ஐஸ்வர்யங் களையும் தந்தருள் பவளே! அம்மா! உன் குளிர்ந்த பார்வையைக் காட்டி உலகை செழிக்கச் செய்வாயாக.
பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குணவதியே! சவுபாக்கியம் தந்தருள்பவளே! லட்சுமி தாயே! உன் கருணையால் வீட்டிலும், நாட்டிலும் செல்வ வளம் கொழிக்கட்டும். பயிர்பச்சை செழித்து வளரட்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும். செல்வ வளம் தருக! செய்யும் தொழில் வளர்க! கருணை பொழியும் கண்களைக் கொண்ட தாயே! அபயமுத்திரை காட்டி அருள்பவளே! அலங்கார மண்டபத்தில் வீற்றிருப்பவளே! நவரத்தின ஆபரணங்களைச் சூடியவளே! மஞ்சள் பட்டு வஸ்திரத்தை விரும்பி ஏற்பவளே! அருள் வடிவானவளே! ஆதிலட்சுமி தாயே! செல்வ வளம் பெறவும், செய்யும் தொழில் வளரவும் உன்னை வணங்குகிறேன்.

ஜடாமகுடம் தாங்கி நிலையாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சந்தானலட்சுமித் தாயே! கங்கணத்தை அணிந்த கையால் வரதமுத்திரை அளிப்பவளே! பூரண கலசம் ஏந்தியிருப்பவளே! மகாராணியைப் போல இருபுறமும் இளங்கன்னியர் சாமரம் வீச காட்சியளிப்பவளே! குழந்தைச் செல்வத்தை இடுப்பில் வைத்திருப்பவளே! சந்தானபாக்கியம் தந்தருள்பவளே! உன் திருவடி தாமரைகளைச் சரணடைந்து பணிகின்றேன்.

தேவர்களாலும், முனிவர்களாலும் விருப்பத்துடன் வணங்கப்படும் வித்யாலட்சுமியே! கலைகளெல்லாம் அள்ளித்தருபவளே! அலைமகளே! கல்விச்செல்வம் தந்து அறியாமையை அகற்றிக் காப்பவளே! ரத்தினமயமானதும், நவரத்தினத்தால் இழைக்கப்பட்டதுமான ஆபரணங்களை அணிந்தவளே! பாவத்தைப்போக்குபவளே! விருப்பங்களை நிறைவேற்றி அருள்பவளே! மதுசூதனனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே! வித்யாலட்சுமியே! எனக்கு அருள்புரிய இதுவே நல்ல தருணம்.
தங்கம் போல பிரகாசிக்கும் தனலட்சுமித்தாயே! பூரணகும்பம், சங்கு, சக்கரம், வில், அம்பு, தாமரையை கரங்களில் தாங்கியிருப்பவளே! உயிர்களுக்கு அருள்புரிபவளே! சங்கநிதி, பதுமநிதிகளின் அதிதேவதையே! சகல சவுபாக்கியங்களையும் கடைக்கண்ணால் வாரிவழங்குபவளே! தஞ்சம் என வந்தவரைத் தாங்கும் தயாபரியே! அரவிந்தனின் அன்புத் துணைவியே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

சர்வ அலங்கார ரூபிணியே! தான்யலட்சுமித்தாயே! மலர்ந்த தாமரை, கரும்பு ஏந்தியிருப்பவளே! கருணை நிறைந்த கடைக் கண்களால் அன்பர் குறை தீர்ப்பவளே! நதிக்கரைகளில் விருப்பமாக வீற்றிருப்பவளே! வற்றாத நீர்வளமும், தானியபெருக்கமும் செய்து உயிர்க்குலத்தைக் காப்பவளே! எப்போதும் என் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிலைத்துஇருக்க அருள்புரிவாயாக. சிவந்த தாமரை மலரில் வீற்றிருந்து அருள்புரியும் கஜலட்சுமித்தாயே! ஆற்றல் மிக்க இரு யானைகள் இருபுறமும் நின்று திருமஞ்சனம் செய்ய மனம் மகிழ்பவளே! அழகுமிக்க அணிகலன்களுடன் கம்பீரமாக இருப்பவளே! உன் அருளால் மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைபெற வேண்டும்.

எட்டுத்திருக்கரங்களைக் கொண்ட வீரலட்சுமித்தாயே! சங்கு, சக்கரம், சூலம், வில், அம்பு, கபாலம் தாங்கியவளே! வெற்றிமாலையைக் கழுத்தில் அணிந்தவளே! பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவளே! தைரியத்தை நல்கிடும் வீரலட்சுமியே! வெற்றி தேவதையே! நாங்கள் செய்யும் செயல்களில் வெற்றியைத்தந்தருள்வாயாக.

மின்னல் போல ஒளிவீசும் விஜயலட்சுமி தாயே! வாசனை மிக்க திரவியங்களை விரும்பிஏற்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! சந்திரனின் சகோதரியே! பள்ளி கொண்ட பரந்தாமனின் மார்பில் குடிகொண்டவளே! வளம் நிறைந்த செல்வ வாழ்வு பெற நல்வழிகாட்டுவாயாக.
Tags:    

Similar News