ஆன்மிகம்
சிவபெருமான் குடும்பம்

இந்த வார விசேஷங்கள் 10.3.2020 முதல் 16.3.2020 வரை

Published On 2020-03-10 02:53 GMT   |   Update On 2020-03-10 02:53 GMT
மார்ச் 10-ம் தேதியில் இருந்து மார்ச் 16-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
10-ந்தேதி (செவ்வாய்) :

* திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் மஞ்சள் நீராடல்.
* நத்தம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.
* காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம்.
* திருக்கோஷ்டியூர் பெருமாள் தீர்த்தவாரி, தங்க தோளுக்கினியானில் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
* மேல்நோக்கு நாள்.

11-ந்தேதி (புதன்) :

* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
* எரிபத்த நாயனார் குருபூஜை.
* நத்தம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி வருதல்.
* காரமடை அரங்கநாதர் திருவீதி உலா.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

12-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம், சுவாமி- தாயார் இந்திர விமானத்தில் பவனி.
* காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.
* திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் ஆலய உற்சவம் தொடக்கம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவ சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.

13-ந்தேதி (வெள்ளி) :

* முகூர்த்த நாள்.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சூரியப் பிரபையிலும் பவனி.
* திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் காலை கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா, இரவு சுவாமி- அம்பாள் இருவரும் கமலப் பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
* ராமேஸ்வரம் பா்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

14-ந்தேதி (சனி) :

* காரடையான் நோன்பு.
* திருக்குறுங்குடி 5 நம்பிகள், 5 கருட வாகனத்தில் பவனி.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோவிலில் லட்ச தீபக் காட்சி.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சேஷ வாகனத்திலும் புறப்பாடு.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம், கல்யாண அலங்கார திருக்கோலம்.
* திருவரங்கம் நம்பெருமாள் திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

15-ந்தேதி (ஞாயிறு) :

* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப்பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி கருட வாகனத்திலும், தாயார் வெள்ளி அம்ச வாகனத்திலும் வீதி உலா.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புன்னை மர கண்ணன் அலங்காரத்தில் பவனி.
* திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

16-ந்தேதி (திங்கள்) :

* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், இரவு அனுமன் வாகனத்தில் சுவாமியும், வெள்ளி கமல வாகனத்தில் தாயாரும் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ராஜாங்க அம்ச வாகனத்தில் வீதி உலா.
* திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி வருதல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News