ஆன்மிகம்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள்

இந்த வார விசேஷங்கள் 3.3.2020 முதல் 9.3.2020 வரை

Published On 2020-03-03 02:55 GMT   |   Update On 2020-03-03 02:55 GMT
மார்ச் 3-ம் தேதியில் இருந்து மார்ச் 9-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
3-ந்தேதி (செவ்வாய்) :

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி.
* நத்தம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம், இரவு மின் விளக்கு அலங்கார தாமரை மலரில் அம்மன் பவனி.
* கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம், இரவு மகிஷா சூரன் சம்ஹார லீலை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.

4-ந்தேதி (புதன்) :

* கோயம்புத்தூர் கோணியம்மன் கோவில் ரத உற்சவம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
* காரமடை அரங்கநாதர் சிறிய திருவடியில் திருவீதி உலா.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் யானை வாகனத்தில் புறப்பாடு.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் மரத் தோளுக்கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* சுமார்த்த ஏகாதசி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோவிலில் ரத உற்சவம்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
* காரமடை அரங்கநாதர் கருட வாகனத்தில் உலா.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல்.
* சமநோக்கு நாள்.

6-ந்தேதி (வெள்ளி) :

* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் காட்சி தருதல்.
* இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாண உற்சவம்.
* காரமடை அரங்கநாதர் திருக்கல்யாணம்.
* திருப்போரூர் முருகப்பெருமான் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.
* பெருவயல் முருகப்பெருமான் காலை விஷ்ணுவாம்சம், இரவு குதிரை வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

7-ந்தேதி (சனி) :

* சனிப்பிரதோஷம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான்- வள்ளி திருமண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் தங்க கயிலாய பர்வதம், அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் வீதி உலா.
* பெருவயல் முருகப்பெருமான் புஷ்பக விமானத்தில் திருவீதி உலா.
* மதுரை இம்மையில் நன்மை தருவார் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

8-ந் தேதி (ஞாயிறு) :


* மாசி மகம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரத உற்சவம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம்.
* கும்பகோணம் சாரங்கபாணி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
* திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்தல்.
* மதுரை இம்மையில் நன்மை தருவார் மாசி மக தீர்த்தம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தீர்த்த உற்சவம், இரவு இந்திர விமானத்தில் உலா.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் திருமலைராஜன் பட்டணம் எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.

9-ந்தேதி (திங்கள்) :

* ஹோலி பண்டிகை.
* பவுர்ணமி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம்.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தெப்ப உற்சவம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் மஞ்சள் பாவாடை தரிசனம், பால்குட ஊர்வலம்.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News