ஆன்மிகம்
சிவபெருமான்

இந்த வார விசேஷங்கள் 18.2.2020 முதல் 24.2.2020 வரை

Published On 2020-02-18 05:11 GMT   |   Update On 2020-02-18 05:11 GMT
பிப்ரவரி 18-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
18-ந்தேதி (செவ்வாய்) :

* கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா.
* காளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் யானை வாகனத்தில் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

19-ந்தேதி (புதன்) :


* சர்வ ஏகாதசி.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் தங்க விருட்ச சேவை.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

20-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் முத்தங்கி சேவை, இரவு தங்கப் பல்லக்கில் பவனி.
* திருகோகர்ணம் சிவபெருமான், சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

21-ந்தேதி (வெள்ளி) :

* மகா சிவராத்திரி
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்
* சிரவண விரதம்
* மூங்கிலனை காமாட்சியம்மன் பெருந்திருவிழா.
* திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் பஞ்சமுகா அர்ச்சனை.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் மின் விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி.
* காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் விருட்ச சேவை.
* மேல்நோக்கு நாள்.

22-ந்தேதி (சனி) :


* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ரத உற்சவம், இரவு தங்க குதிரை வாகனத்தில் உலா.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திரு கோகர்ணம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவ பெருமான் ரத உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

23-ந்தேதி (ஞாயிறு) :

* அமாவாசை.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்ச தீபம்.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் காலை இந்திர விமானத்திலும், இரவு தங்க விருட்சத்திலும் பவனி.
* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருகல்யாண உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (திங்கள்) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* காளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News