ஆன்மிகம்
முருகன்

இந்த வார விசேஷங்கள் 4.2.2020 முதல் 10.2.2020 வரை

Published On 2020-02-04 03:08 GMT   |   Update On 2020-02-04 03:08 GMT
பிப்ரவரி 4-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
4-ந்தேதி (செவ்வாய்) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை தந்தப் பல்லக்கில் பவனி, மாலை சுவாமி தங்கக் குதிரையிலும், அம்பாள் தங்கப் பல்லக்கிலும் வலைவீசியருளல்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தெப்ப உற்சவம், இரவு தங்கத் தேரில் சூரசம்ஹார லீலை.
* திருச்சேறை சாரநாதர், ராம அவதார காட்சி, இரவு அனுமன் வாகனத்தில் வீதி உலா.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவம் ஆரம்பம்.
* திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் ராஜ அலங்காரம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை எடுப்புத் தேரில் உலா, இரவு சப்தாவரணம்.
* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
* கோயம்புத்தூா் பாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
* பழனி ஆண்டவர் வெள்ளி கேடயத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

6-ந்தேதி (வியாழன்) :

* பிரதோஷம்.
* குன்றக்குடியில் வெள்ளி ரத உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை தங்கப்பல்லக்கில் பவனி, சுவாமி- அம்பாள் ரிஷப சேவை.
* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருவீதி உலா.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பவனி.
* மேல்நோக்கு நாள்.

7-ந்தேதி (வெள்ளி) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.
* பாளையங்கோட்டை ராமசுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோவிலில் கதிரறுப்பு.
* பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம், இரவு வெள்ளி ரதம்.
* திருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய் தாழி சேவை, இரவு ராஜாங்க அலங்காரம்.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.
* சமநோக்கு நாள்.

8-ந்தேதி (சனி) :

* தைப்பூசம்.
* வடலூர் ராமலிங்க அடிகளார் அருட்பெருஞ்சோதி தரிசனம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கக் குதிரையிலும், அம்பாள் வெள்ளி சிம்மாசனத்திலும் வண்டியூா் எழுந்தருளி தெப்ப உற்சவம்.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி, பழனி முருகப்பெருமான், சென்னை கபாலீஸ்வரா், திருச்சேறை சாரதநாதர், மருதமலை முருகப்பெருமான் ஆகிய * தலங்களில் ரத உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

9-ந்தேதி (ஞாயிறு) :


* பவுர்ணமி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சவுந்திர சபா நடனம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் கருட வாகனத்தில் பவனி.
* ஸ்ரீமுஷ்ணம் சுவேதாநதித் தீர்த்தம்.
* திருக்குற்றாலம் குற்றாலநாதர் தெப்ப உற்சவம்.
* திருச்சேறை சாரநாதர் சப்தாவரணம்.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி கோவில் தெப்ப உற்சவம்.
* பழனி முருகப்பெருமான், தங்கக் குதிரையில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

10-ந்தேதி (திங்கள்) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மகா தரிசனம்.
* பழனி முருகப்பெருமான், பெரிய மயில் வாகனத்தில் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

Tags:    

Similar News