ஆன்மிகம்
சிவபெருமான் குடும்பம்

இந்த வார விசேஷங்கள் 28.1.2020 முதல் 3.2.2020 வரை

Published On 2020-01-28 02:20 GMT   |   Update On 2020-01-28 02:20 GMT
ஜனவரி 28-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
28-ந்தேதி (செவ்வாய்) :

சதுர்த்தி விரதம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
கல்லிடைக்குறிச்சி சிவபெருமான், தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு கண்டருளல்.
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
மேல்நோக்கு நாள்.

29-ந்தேதி (புதன்) :

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்கச் சப்பரத்தில் பவனி, இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு.
சூரியநயினார் கோவில் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
கீழ்நோக்கு நாள்.

30-ந்தேதி (வியாழன்) :

முகூர்த்த நாள்.
வசந்த பஞ்சமி.
திருநெல்வேலி சாலைக்குமாரசுவாமி கோவிலில் வருசாபிஷேகம்.
திருநெல்வேலி, குன்றக்குடி, திருச் சுழிகை, பழனி, சுவாமிமலை ஆகிய திருத்தலங்களில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
திரப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி சிம்மாசனத்தில் திருவீதி உலா.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
மேல்நோக்கு நாள்.

31-ந்தேதி (வெள்ளி) :

சஷ்டி விரதம்.
திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, இரவு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி பவனி வருதல்.
திருச்சேறை சாரநாதர் கோவிலில் உற்சவம் தொடக்கம்.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் சுவாமி புறப்பாடு கண்டருளல்.
திருப்புடைமருதூா் நாறும்பூநாதர் கோவிலில் சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பவனி.
சமநோக்கு நாள்.

1-ந்தேதி (சனி) :

ரத சப்தமி.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், ரத்ன சிம்மாசனத்தில் திருவீதி உலா.
கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம்.
திருச்சேறை சாரநாதர், சூரிய பிரபையில் வேணுகோபாலன் திருக்கோலக் காட்சி.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
சமநோக்கு நாள்.

2-ந்தேதி (ஞாயிறு) :

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல், ரிஷப வாகனத்தில் சுவாமி உலா.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விருட்ச வாகனத்தில் பவனி, சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரையில் பவனி.
கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சூரிய பிரபையில் திருவீதி உலா.
திருச்சேறை சாரநாதர், பரமபதநாதர் திருக்கோலமாய் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (திங்கள்) :

கார்த்திகை விரதம்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சின்ன வைரத்தேரில் பவனி, இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பாடு.
கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் திருவீதி உலா.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்பாள் யாழி வாகனத்திலும் புறப்பாடு.
பழனி முருகப்பெருமான் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News