ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

இந்த வார விசேஷங்கள் 3.12.2019 முதல் 9.12.2019 வரை

Published On 2019-12-03 03:27 GMT   |   Update On 2019-12-03 03:27 GMT
டிசவம்பர் 3-ம் தேதியில் இருந்து டிசம்பர் 9-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
3-ந்தேதி (செவ்வாய்) :

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூத வாகனத்தில் திருவீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் பவனி.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை பூத வாகனத்திலும், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

4-ந்தேதி (புதன்) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை சேஷ வாகனத்திலும், இரவு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் பூத வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (வியாழன்) :

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (வெள்ளி) :

* முகூர்த்த நாள்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
* பழனி ஆண்டவர் புறப்பாடு கண்டருளல்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்தி மூவருடன் வீதி உலா, இரவு சுவாமி வெள்ளி ரதத்திலும், அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

7-ந்தேதி (சனி) :

* திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ரத உற்சவம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* தேவகோட்டை ரெங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி ஆகிய தலங்களில் சுவாமி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் யானை வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

8-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* கைசிக ஏகாதசி, சர்வ ஏகாதசி.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் வெள்ளி விமானத்திலும், குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.
* பழனி தண்டாயுதபாணி திருவீதி உலா.
* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

9-ந்தேதி (திங்கள்) :

* பிரதோஷம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம்.
* பரணி தீபம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை கண்ணாடி விமானத்தில் பவனி, இரவு சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News