ஆன்மிகம்
திருப்பதி பெருமாள்

இந்த வார விசேஷங்கள் 1.10.2019 முதல் 7.10.2019 வரை

Published On 2019-10-01 03:10 GMT   |   Update On 2019-10-01 03:10 GMT
அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அக்டோபர் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
1-ந்தேதி (செவ்வாய்) :

* திருப்பதி ஏழுமலையப்பன் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் பவனி.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனத்தில் வீதி உலா.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் புறப்பாடு.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.
* சமநோக்கு நாள்.

2-ந்தேதி (புதன்) :

* சதுர்த்தி விரதம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் பகலில் சிம்ம வாகனத்தில் பவனி, இரவு முத்துப்பந்தல் அருளிய காட்சி.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராம அவதாரம், இரவு அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.
* சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி அலங்காரம், கருட வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (வியாழன்) :

* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கஜேந்திர மோட்சம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் காலை விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபாள வாகனத்திலும் புறப்பாடு.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.
* சமநோக்கு நாள்.

4-ந்தேதி (வெள்ளி) :

* சஷ்டி விரதம்.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம், இரவு நகர கெண்டி லட்சுமிகார ஆபரணங்களுடன் கருட உற்சவம்.
* சிருங்கேரி சாரதாம்பாள் வீணை சாரதா அலங்காரம்.
* சமநோக்கு நாள்.

5-ந்தேதி (சனி) :

* திருப்பதி ஏழுமலையப்பன் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனத்தில் பவனி.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை காலிங்க நர்த்தனம், மாலை மோகன அவதாரம்.
* சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.
* கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (ஞாயிறு) :

* துர்காஷ்டமி.
* திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்ப விமானத்தில் பவனி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
* மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள்.

7-ந்தேதி (திங்கள்) :

* சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.
* மகா நவமி.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் தசரா திருவிழா.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் வையாழி சேவை.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News