ஆன்மிகம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்

இந்த வார விசேஷங்கள் 3.9.2019 முதல் 9.9.2019 வரை

Published On 2019-09-03 03:11 GMT   |   Update On 2019-09-03 03:11 GMT
செப்டம்பர் 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 9-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
3-ந்தேதி (செவ்வாய்) :

* ரிஷி பஞ்சமி.
* மகாலட்சுமி விரதம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல், கயிலாச காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி மச்ச அவதாரம்.
* விருதுநகர் சொக்கநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.

4-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுதல், யானை வாகனத்தில் திருவீதி உலா.
* விருதுநகர் சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி கயிலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ருக்மணி - சத்யபாமா சமேத கிருஷ்ணன் தோற்றத்தில் கோவர்த்தனகிரியில் கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

5-ந்தேதி (வியாழன்) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் உலவாய் கோட்டை அருளிய திருவிளையாடல், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் வீதி உலா.
* விருதுநகர் சொக்கநாதர் யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி இரவு புஷ்ப சப்பரத்தில் ராஜாங்க அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (வெள்ளி) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, விருட்சபாரூட தரிசனம்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி.
* விருதுநகர் சொக்கநாதர் குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

7-ந்தேதி (சனி) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு சுவாமி பட்டாபிஷேகம். சுவாமியும் அம்பாளும் தங்க பல்லக்கில் பவனி.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் வீதி உலா.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி வருதல்.
* விருதுநகர் சொக்கநாதர் விருட்ச வாகனத்தில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.

8-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் குதிரை கயிறு மாறுதல்.
* திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் கரூர் சித்தரால் திருநெல்வேலிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்தி விழா.
* விருதுநகர் சொக்கநாதர் நந்தி வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

9-ந்தேதி (திங்கள்) :

* சர்வ ஏகாதசி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரத்தில் வீதி உலா.
* விருதுநகர் சொக்கநாதர் யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் பவனி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News