ஆன்மிகம்
நவநீத கிருஷ்ணன்

இந்த வார விசேஷங்கள் 20.8.2019 முதல் 26.8.2019 வரை

Published On 2019-08-20 03:50 GMT   |   Update On 2019-08-20 03:50 GMT
ஆகஸ்டு 20-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 26-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
20-ந்தேதி (செவ்வாய்) :

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.

21-ந்தேதி (புதன்) :

* திருச்செந்தூர், பெருவயல் ஆகிய தலங்களில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

22-ந்தேதி (வியாழன்) :

* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு.
* திருப்போரூர் முருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

23-ந்தேதி (வெள்ளி) :

* கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி).
* கார்த்திகை விரதம்.
* திருநெல்வேலி டவுண் சந்தானகோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
* வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தங்கரதக் காட்சி.
* கீழ்நோக்கு நாள்.

24-ந்தேதி (சனி) :

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
* வரகூர் உறியடி உற்சவம்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

25-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், இரவு சுவாமி- அம்பாள் தங்க மயில் வாகனத்திலும் திருவீதி உலா.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும் பவனி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

26-ந்தேதி (திங்கள்) :

* சர்வ ஏகாதசி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச்சப்பரம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் திருவீதி உலா.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராமாவதார காட்சி.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News