ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 12.3.2019 முதல் 18.3.2019 வரை

Published On 2019-03-12 03:52 GMT   |   Update On 2019-03-12 03:52 GMT
மார்ச் 12-ம் தேதியில் இருந்து மார்ச் 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
12-ந்தேதி (செவ்வாய்) :

* கார்த்திகை விரதம்.
* சஷ்டி விரதம்.
* பழனி, குன்றக்குடி, மதுரை, சுவாமிமலை, திருப்பரங்குன்றம் தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் ஆரம்பம்.
* திருச்சிமலை, கழுகுமலை, திருவாரூர், கங்கைகொண்டான், திருச்சுழி, காஞ்சீ புரம், திருப்புவனம் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கிருஷ்ண அவதார காட்சி, இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

13-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோவிலில் பங்குனி உற்சவம்.
* திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
* காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் வீதி உலா.
* திருப்புவனம் ஜெகநாத பெருமாள், பரமக்குடி முத்தாலம்மன் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
* திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி.
* மேல்நோக்கு நாள்.

14-ந்தேதி (வியாழன்) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வேணுவன லிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி.
* கழுகுமலை முருகப்பெருமான் காலை புஷ்பக விமானத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் திரு வீதி உலா.
* பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் பவனி.
* ராமகிரிபேட்டை கல்யாண நரசிங்கப் பெருமாள் ஆலய உற்சவம் ஆரம்பம்.
* சமநோக்கு நாள்.

15-ந்தேதி (வெள்ளி) :

* காரடையான் நோன்பு
* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆண்டாள் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* நத்தம் மாரியம்மன் ஆலயத்தில் பால் காவடி உற்சவம்.
* ராமகிரிபேட்டை கல்யாண நரசிங்கப்பெருமாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் அனுமன் வாகனத்தில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.



16-ந்தேதி (சனி) :

* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம், இரவு பூப்பல்லக்கில் பவனி.
* பரமக்குடி முத்தாலம்மன் விருட்ச வாகனத்தில் வீதி உலா.
* திருச்சி தாயுமானவர் வெள்ளி விருட்ச சேவை.
* கழுகுமலை முருகப்பெருமான் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு மயில் வாகனத்திலும் உலா வருதல்.
* சமநோக்கு நாள்.

17-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* நாங்குநேரி வானமாமலை பெருமாள் மாலை தங்கச் சப்பரத்திலும், இரவு கண்ணாடி சப்பரத்திலும் பவனி.
* திருச்சுழி திருமேனிநாதர் விருட்ச வாகனத்திலும் உலா, ஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு.
* கழுகுமலை முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் பவனி.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

18-ந்தேதி (திங்கள்) :

* பிரதோஷம்.
* காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயங்களில் ரத உற்சவம்.
* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாளுக்கு காலை திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.
* அனைத்து சிவாலயங்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News