ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 8.1.2019 முதல் 14.1.2019 வரை

Published On 2019-01-08 04:26 GMT   |   Update On 2019-01-08 04:26 GMT
ஜனவரி 8-ம் தேதியில் இருந்து ஜனவரி 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
8-ந்தேதி (செவ்வாய்) :

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய்க் காப்பு உற்சவம், 16 வண்டி சப்பரத்தில் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம், சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு.
* மதுரை செல்லத்தம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

9-ந்தேதி (புதன்) :


* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கள்ளழகர் திருக்கோலமாய் இரவு சந்திர பிரபையில் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதி உலா.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

10-ந்தேதி (வியாழன்) :

* சதுர்த்தி விரதம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம், கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணன் திருக்கோலமாய் மாலை தந்த பரங்கி நாற்காலியில் புறப்பாடு.
* பெருஞ்சேரி வாகீஸ்வரர் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

11-ந்தேதி (வெள்ளி) :

* மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை, இரவு தங்க சேஷ வாகனத்தில் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை தங்க சப்பரத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.



12-ந்தேதி (சனி) :

* விநாயகர் சஷ்டி.
* திருநெல்வேலி, குன்றக்குடி, பழனி, திருச்சுழி, காளையார்கோவில், சுவாமி மலை ஆகிய திருத் தலங்களில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், சுந்தரராஜ கோலமாய் காட்சியளித்தல், இரவு தங்க அம்ச வாகனத்தில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

13-ந்தேதி (ஞாயிறு) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி- அம்பாள் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம்.
* காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள், திருச்சேறை சாரநாதர் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
* மேல்நோக்கு நாள்.

14-ந்தேதி (திங்கள்) :

* போகி பண்டிகை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் ஊர்வலம், இரவு தங்க கவசம் அணிந்து ஆளேறும் பல்லக்கில் பவனி.
* திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சி தருதல்.
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ரத்தின சிம்மாசனத்தில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News