ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 6.11.2018 முதல் 12.11.2018 வரை

Published On 2018-11-07 03:54 GMT   |   Update On 2018-11-07 03:54 GMT
நவம்பர் மாதம் 6-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 12-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
6-ந்தேதி (செவ்வாய்) :

* தீபாவளி பண்டிகை.
* திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* வள்ளியூர் முருகன் கோவில் உற்சவம் தொடக்கம்.
* வீரவநல்லூர் சுவாமி அம்பாள் ஊஞ்சல் உற்சவம்.
* மதுரை மீனாட்சி அம்மன் வைர கிரீடம் சாற்றியருளல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.

7-ந்தேதி (புதன்) :

* அமாவாசை.
* கேதார கவுரி விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் மஞ்சள் நீராட்டு விழா, இரவு பாரூடராய் பட்டிணப் பிரவேசம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் அன்னகூட உற்சவம்.
* வள்ளியூர் முருகப்பெருமான் கலைமான் கிடா வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

8-ந்தேதி (வியாழன்) :

* சகல முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி உற்சவம் ஆரம்பம்.
* சிக்கல் சிங்காரவேலர் கோவில் உற்சவம் தொடக்கம், தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.
* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் உற்சவம் தொடக்கம், அன்ன வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் வெள்ளி படிச்சட்டத்தில் பவனி.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்சமூர்த்தியுடன் உற்சவம் தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.

9-ந்தேதி (வெள்ளி) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில் வருசாபிஷேகம்.
* சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரண காட்சி, இரவு ஆட்டுகிடா வாகனத்தில் புறப்பாடு.
* வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும் புறப்பாடு.
* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் சந்திர பிரபையில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.



10-ந்தேதி (சனி) :

* சிக்கல் சிங்கார வேலவர் மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.
* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் கற்பக விருட்ச வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

11-ந்தேதி (ஞாயிறு) :

* சதுர்த்தி விரதம்.
* முகூர்த்த நாள்.
* மாயவரம் கவுரிநாதர் ரிஷப வாகனத்தில் உலா.
* குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், அன்ன வாகனத்தில் புறப்பாடு.
* சிக்கல் சிங்காரவேலவர் வேணுகோபால திருக்கோலம்.
* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் கருட வாகனத்தில் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

12-ந்தேதி (திங்கள்) :


* சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் ரத உற்சவம், இரவு உமாதேவியிடம் முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்வு.
* குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் மூன்று கொத்து மஞ்சத்தில் பவனி.
* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.
* திருவனந்தபுரத்தில் சிவபெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News