ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 29.5.2018 முதல் 4.6.2018 வரை

Published On 2018-05-29 03:44 GMT   |   Update On 2018-05-29 03:44 GMT
மே மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
29-ந்தேதி (செவ்வாய்) :

பவுர்ணமி பூஜை.
மதுரை கூடலழகர் உபயநாச்சியார்களுடன் ரத உற்சவம்.
உத்தமர் கோவில் சிவபெருமான் புஷ்பப் பல்லக்கு.
காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருமண வைபவம்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுப்பரூர் ஆதிகேசவப் பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பால்குட ஊர் வலம்.
பழனி முருகப்பெருமான் தங்கப் பல்லக்கில் பவனி.
சமநோக்கு நாள்.

30-ந்தேதி (புதன்) :

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு உபயநாச்சியார்களுடன் சந்திரப் பிரபையிலும் பவனி.
காட்டுப்பரூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா, இரவு புஷ்பச் சப்பரம்.
சமநோக்கு நாள்.

31-ந்தேதி (வியாழன்) :

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் பவனி.
மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதாரக் காட்சி.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா.
பழனி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.



1-ந்தேதி (வெள்ளி) :

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் பவனி.
அரியக்குடி சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம்.
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் காலை வேணுகான கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல், இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் திருவீதி உலா.
கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (சனி) :

சங்கடஹர சதுர்த்தி.
குரங்கணி முத்து மாலையம்மன் வருசாபிஷேகம்.
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் உபயநாச்சியார்களுடன் ரத உற்சவம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
அரியக்குடி சீனிவாசப் பெருமாள் ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் விடையாற்று உற்சவம்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்ச சேவை.
குச்சானூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (ஞாயிறு) :

முகூர்த்த நாள்.
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலா.
உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப்பல்லக்கில் பவனி.
மேல்நோக்கு நாள்.

4-ந்தேதி (திங்கள்) :

முகூர்த்த நாள்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் ஆடும் பல்லக்கில் தீர்த்தவாரி.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
மேல்நோக்கு நாள். 
Tags:    

Similar News