ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 8.5.2018 முதல் 14.5.2018 வரை

Published On 2018-05-08 03:34 GMT   |   Update On 2018-05-08 03:34 GMT
மே 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
8-ந் தேதி (செவ்வாய்)

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சப்தாவரணம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் பொங்கல் விழா, இரவு மின்விளக்கு தீப அலங்கார புஷ்ப விமானம்.
* மேல்நோக்கு நாள்.

9-ந் தேதி (புதன்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.
* ஸ்ரீவைகுண்டர் வைகுண்டபதி புறப்பாடு.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், சென்னை சென்னகேசவப் பெருமாள் ஆகிய தலங்களில் விடையாற்று உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார முத்துப் பல்லக்கில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

10-ந் தேதி (வியாழன்)

* தத்தாத்ரேயர் ஜெயந்தி.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப பல்லக்கில் பவனி.
* சமயபுரம் மாரியம்மன் வசந்த மண்டபத்தில் பவனி.
* காரைக்குடி கொப்புடையம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.



11-ந் தேதி (வெள்ளி)

* சர்வ ஏகாதசி.
* காரைக்குடி கொப்புடையம்மன் கயிலாச வாகனத்தில் திருவீதி உலா.
* வீரபாண்டி கவுமாரியம்மன் சன்னிதி தெருவில் ரத உற்சவம்.
* ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

12-ந் தேதி (சனி)

* வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரதவீதியில் ரத உற்சவம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்று.
* மேல்நோக்கு நாள்.

13-ந் தேதி (ஞாயிறு)


* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* காரைக்குடி கொப்புடையம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் காலை தெற்கு ரத வீதியிலும், இரவு மேற்கு ரத வீதியிலும் பவனி.
* சகல சிவன் கோவிலிலும் இன்று மாலை நந்திகேஸ்வரர் சிறப்பு அபிஷேக, ஆராதனை.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

14-ந் தேதி (திங்கள்)


* போதாயன அமாவாசை.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மேற்கு ரத வீதியில் இருந்து நிலைக்கு வருதல், இரவு முத்து சப்பரத்தில் தேர் தடம் பார்த்தல்.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சப்தாவரணம் சாற்று முறை.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

Tags:    

Similar News