ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 6-3-2018 முதல் 12-3-2018 வரை

Published On 2018-03-06 03:47 GMT   |   Update On 2018-03-06 03:47 GMT
மார்ச் 6-ம் தேதியில் இருந்து மார்ச் 12-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
6-ந்தேதி (செவ்வாய்) :

* நத்தம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பவனி வருதல்
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.

7-ந்தேதி (புதன்) :

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* நத்தம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோவிலில் லட்ச தீபம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தீர்த்தவாரி.
* கீழ்நோக்கு நாள்.

8-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, புன்னை மர கண்ணன் திருக்கோலமாய்காட்சியளித்தல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.

9-ந்தேதி (வெள்ளி) :

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, சுவாமி மாட வீதி புறப்பாடு.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க அம்ச வாகனத்தில் பவனி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளிய பின், தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில்கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.



10-ந்தேதி (சனி) :

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* குச்சானூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* இன்று கருட தரிசனம் செய்வது நன்மை தரும்.
* கீழ்நோக்கு நாள்.

11-ந்தேதி (ஞாயிறு) :

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* கீழ்நோக்கு நாள்.

12-ந்தேதி (திங்கள்) :

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கண்ட பேரண்ட பட்சி ராஜன் அலங்காரம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News