ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 9.1.2018 முதல் 15.1.2018 வரை

Published On 2018-01-09 04:28 GMT   |   Update On 2018-01-09 04:28 GMT
9.1.2018 முதல் 15.1.2018 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
9-ந்தேதி (செவ்வாய்) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அஷ்டமி பிரதட்சணம்.
* மதுரை வடக்குவாசல் செல்லத்தம்மன் உற்சவம் முத்துமாலையம் மண் புறப்பாடு கண்டருளல்.
* திருவண்ணாமலை, திரு வையாறு தலங்களில் சிவபெருமான் விருட்ச சேவை.
* சமநோக்கு நாள்.

10-ந்தேதி (புதன்) :

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை, இரவு தங்க சேஷ வாகனத்தில் பவனி.
* மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பவனி.
* சமநோக்கு நாள்.

11-ந்தேதி (வியாழன்) :

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலம், இரவு தங்க அம்ச வாகனத்தில் பவனி.
* பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* திருவையாறு சிபபெருமான் பவனி வருதல்.
* சமநோக்கு நாள்.

12-ந்தேதி (வெள்ளி) :

* சர்வ ஏகாதசி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம்.
* மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.



13-ந்தேதி (சனி) :

* போகிப் பண்டிகை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து பவனி, மாலை ஆளேறும் பல்லக்கில் புறப்பாடு.
* மதுரை செல்லத்தம்மன் மாலை சப்பரம், இரவு குதிரை வாகனத்தில் உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவண்ணாமலை சிவபெருமான் பவனி.
* ஸ்ரீபெரும்புதூர் ஆண்டாள் திருக்கல்யாணம்.
* சமநோக்கு நாள்.

14-ந்தேதி (ஞாயிறு) :

* தைப்பொங்கல்.
* பிரதோஷம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீபம் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கல் யானைக்கு கரும்பு அளித்த லீலை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோலம், மாலை தங்கப் பல்லக்கில் ஊஞ்சல் சேவை.
* சபரிமலை மகர ஜோதி தரிசனம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பாவை சாற்றுமுறை.
* சமநோக்கு நாள்.

15-ந்தேதி (திங்கள்) :

* மாட்டுப் பொங்கல்.
* திருமொச்சியூர் சூரிய நயினார் கோவில், திருவா வடுதுறை ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க தோளுக்கினியானில் பெரியாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளி, இரவு ஆண்டாள் சன்னிதியில் முத்துக்குறி கண்டருளல்.
* காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பரிவேட்டைக்கு எழுந்தருளல்.
* மதுரை செல்லத்தம்மன் விருட்ச சேவை.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News