ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (19.9.2017 முதல் 25.9.2017 வரை)

Published On 2017-09-19 04:25 GMT   |   Update On 2017-09-19 04:25 GMT
19.9.2017 முதல் 25.9.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
19-ந்தேதி (செவ்வாய்) :

* மகாளய அமாவாசை.
* நவநீதகிருஷ்ண சுவாமி ஆண்டாள் திருக்கோலமாய் காட்சியருளல், மாலை புன்னை மர கிருஷ்ணன் அலங்காரம், இரவு புஷ்ப தண்டியலில் தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

20-ந்தேதி (புதன்) :

* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி புல்லின் வாய்கிண்டல் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி யளித்தல், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

21-ந்தேதி (வியாழன்) :

* நவராத்திரி ஆரம்பம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம்.
* சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.
* திருநெல்வேலி தொண்டர் நயினார் கோவிலில் கோமதி அம்மன் விசேஷ அலங்காரம்.
* மதுரை மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் காட்சியளித்தல்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜமன்னார் காட்சி, மாலை சேஷ வாகனத்தில் பவனி, இரவு புஷ்பப் பல்லக்கில் கள்ளர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* சமநோக்கு நாள்.

22-ந்தேதி (வெள்ளி) :


* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க அலங்காரம்.
* மதுரை மீனாட்சி நவராத்திரி கொலு மண்டபத்தில் அலங்கார காட்சி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.



23-ந்தேதி (சனி) :

* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேய சுவாமிக்கு 5008 வடை மாலை அலங்காரம்.
* தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்க டேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் சினிவாச பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி மச்ச அவதார காட்சி.
* சமநோக்கு நாள்.

24-ந்தேதி (ஞாயிறு) :

* சதுர்த்தி விரதம் திருப்பதி திருவேங்கடமுடையான் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் பவனி.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ருக்மணி- சத்யபாமா சமேத கிருஷ்ணன் கோவர்த்தனகிரியில் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் புறப்பாடு.
* கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

25-ந்தேதி (திங்கள்) :

* திருப்பதி திருவேங்கடமுடையான் சிம்ம வாகனத்தில் உலா, இரவு முத்துபந்தல் அருளும் காட்சி.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி தவழ்ந்த கண்ணன் அலங்காரம், இரவு புஷ்ப சப்பரத்தில் ராஜாங்க அலங்காரம்.
* தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருவீதி புறப்பாடு.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News