ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (29.8.2017 முதல் 4.9.2017 வரை)

Published On 2017-08-29 04:20 GMT   |   Update On 2017-08-29 04:20 GMT
29.8.2017 முதல் 4.9.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
29-ந்தேதி (செவ்வாய்) :

* மதுரை சொக்கநாதர் உலாவாய் கோட்டை அருளிய திருவிளையாடல், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் பவனி.
* விருதுநகர் சொக்க நாதர் யானை வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.

30-ந்தேதி (புதன்) :

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.
* குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி வரும் காட்சி.
* விருதுநகர் சொக்க நாதர் குதிரை வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

31-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிர மணிய சுவாமி மயில் வாகனத்தில் வீதி உலா.
* திருநெல்வேலி தொண்டர் நயினார் கோவிலில் கரூர் சித்தரால் திருநெல்வேலிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்தி விழா.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திரு விளையாடல்,இரவு சுவா மிக்கு பட்டாபிஷேகம், சுவாமி-அம்பாள் தங்கப் பல்லக்கில் பவனி.
* விருதுநகர் சொக்க நாதர்- அம்பாள் விருட்ச சேவை.
* கீழ்நோக்கு நாள்.

1-ந்தேதி (வெள்ளி) :

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமானும், திருவாதவூர் மாணிக்கவாசகரும் மதுரை எழுந்தருளல்.
* மதுரை சொக்கநாதர் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல், தங்கக் குதிரையில் பவனி வரும் காட்சி.
* விருதுநகர் சொக்க நாதர் நந்தி வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.



2-ந்தேதி (சனி) :

* பக்ரீத் பண்டிகை.
* சர்வ ஏகாதசி.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் அதிகாலை சண் முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை, சுவாமி-அம்பாள் விருசபாரூட தரிசனம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* விருதுநகர் சொக்க நாதர் யானை வாகனத்திலும், அம்மன் புஷ்பப் பல்லக்கிலும் திருவீதி உலா.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விறகு விற்ற திருவிளை யாடல், சுவாமி-அம்மன் தங்கச் சப்பரத்தில் திருவீதி உலா.
* விருதுநகர் சொக்க நாதர் கோவிலில் ரத உற்சவம்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

4-ந்தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* ஓணம் பண்டிகை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி.
* விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News