ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (1.8.2017 முதல் 7.8.2017 வரை)

Published On 2017-08-01 06:46 GMT   |   Update On 2017-08-01 06:46 GMT
1.8.2017 முதல் 7.8.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
1-ந்தேதி (செவ்வாய்) :

* சங்கரன்கோவில் கோமதி அம்மன் கனக தண்டியலில் வீதி உலா.
* ராமேஸ்வரம் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்மன் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டினப் பிரவேசம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கக் குதிரையில் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (புதன்) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கு.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை சட்டத் தேரிலும், இரவு புஷ்ப விமானத்திலும் திருவீதி உலா.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.

3-ந்தேதி (வியாழன்) :

* ஆடிப் பெருக்கு.
* சர்வ ஏகாதசி.
* மதுரை மீனாட்சி அம்மன் தீர்த்தவாரி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி வாகனத்தில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

4-ந்தேதி (வெள்ளி) :

* வரலட்சுமி விரதம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.
* இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கொடியேற்று விழா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.



5-ந்தேதி (சனி) :

* சனிப் பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் விருட்ச சேவை.
* சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (ஞாயிறு) :

* ஆடித் தபசு
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் ஆடித் தபசு, மாலை ரிஷப வாகனத்தில் சங்கரநாராயண சுவாமி காட்சி தருதல், இரவு யானை வாகனத்தில் உமாமகேஸ்வரர் காட்சி தருதல்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

7-ந்தேதி (திங்கள்) :

* பவுர்ணமி.
* மதுரை கள்ளழகர் கோவில் ரத உற்சவம்.
* கீழ்திருப்பதி கல்வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, நான்கு மாடவீதி புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* சங்கரன்கோவில் சுவாமி அம்மன் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News