ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (4.7.2017 முதல் 10.7.2017 வரை)

Published On 2017-07-04 04:01 GMT   |   Update On 2017-07-04 04:01 GMT
4.7.2017 முதல் 10.7.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
4-ந்தேதி (செவ்வாய்) :

* சர்வ ஏகாதசி.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி வரும் காட்சி.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் திருவீதி உலா.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

5-ந்தேதி (புதன்) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் தங்கப்பல்லக்கிலும், அம்மன் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கிலும் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஊஞ்சல் உற்சவம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் சந்திர பிரபையிலும் திருவீதி உலா.
* திருக்கோளக்குடி சிவபெருமான் கேடய சப்பரத்தில் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.



6-ந்தேதி (வியாழன்) :

* பிரதோஷம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதராக காட்சி தருதல்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
* திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
* மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சல் சேவை.
* சமநோக்கு நாள்.

7-ந்தேதி (வெள்ளி) :

* திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ரத உற்சவம்.
* திருக்கோளக்குடி சிவபெருமான் இரவு வெள்ளி விருட்ச சேவை.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
* மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவ சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.

8-ந்தேதி (சனி) :

* பவுர்ணமி.
* காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியலிலும் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஊஞ்சல் சேவை.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
* இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.
* கீழ்நோக்கு நாள்.



9-ந்தேதி (ஞாயிறு) :

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ரத உற்சவம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் ரத உற்சவம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், தாயார் இருவரும் கண்ணாடி சப்பரத்தில் சூர்ணோற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

10-ந்தேதி (திங்கள்) :

* திருநெல்வேலி நகரம் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இன்று முதல் மூன்று தினங்கள் உற்சவம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூம் பல்லக்கிலும் பவனி.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News