ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (20.6.2017 முதல் 26.6.2017 வரை)

Published On 2017-06-20 03:58 GMT   |   Update On 2017-06-20 03:58 GMT
20.6.2017 முதல் 26.6.2017 வரை வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
20-ந்தேதி (செவ்வாய்) :

* சர்வ ஏகாதசி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.
* ஸ்ரீவைகுண்டம்
* வைகுண்டபதி பவனி.
* சமநோக்கு நாள்.

21-ந்தேதி (புதன்) :

* கார்த்திகை விரதம்.
* பிரதோஷம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சிதம்பரம், ஆவுடையார் கோவில், செப்பறை ஆகிய திருத்தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* திருத்தணி முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
* மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நந்தீஸ்வரர் பெருமானுக்கு, மாலை சிறப்பு அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.

22-ந்தேதி (வியாழன்) :

* மாத சிவராத்திரி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திர சேகரர் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
* சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.



23-ந்தேதி (வெள்ளி) :

* அமாவாசை.
* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஆகிய திருத்தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.

24-ந்தேதி (சனி) :

* சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஆகிய தலங் களில் சிவபெருமான் பவனி வரும் காட்சி.
* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் சுவாமி வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.



25-ந்தேதி (ஞாயிறு) :

* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம், தோளுக்கினியானில் சுவாமி பவனி வரும் காட்சி.
* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
* சிதம்பரம், ஆவுடையார் கோவிலில் சிவபெருமான் விருட்ச சேவை.
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* சமநோக்கு நாள்.

26-ந்தேதி (திங்கள்) :

* ரமலான் பண்டிகை.
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவில் வருசாபிஷேகம்.
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா.
* சிதம்பரம், ஆவுடையார் கோவில் தலங்களில் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News