ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (28.3.2017 முதல் 3.4.2017 வரை)

Published On 2017-03-28 03:56 GMT   |   Update On 2017-03-28 03:56 GMT
28.3.2017 முதல் 3.4.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
28-ந்தேதி (செவ்வாய்) :

* அருப்புக்கோட்டை, தாயமங்கலம் ஆகிய தலங்களில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் காலை காளிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோல காட்சி.
* கும்பகோணம் ராமபிரான் உற்சவம் ஆரம்பம், இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

29-ந்தேதி (புதன்) :

* தெலுங்கு வருடப் பிறப்பு.
* மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் சுவாமி ராஜாங்க அலங்காரம்.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா.
* கும்பகோணம் ராமபிரான் சூரிய பிரபையில் பவனி வரும் காட்சி.
* சமநோக்கு நாள்.

30-ந்தேதி (வியாழன்) :

* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* கும்பகோணம் ராமபிரான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் காலை ராஜாங்க அலங்கார காட்சி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி சூர்ணாபிஷேகம், இரவு கோ ரதம், புஷ்பப் பல்லக்கில் கல்யாண திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* சமநோக்கு நாள்.

31-ந்தேதி (வெள்ளி) :

* லட்சுமி கணபதி விரதம்.
* குன்றக்குடி, பழனி, சுவாமிமலை, மதுரை ஆகிய தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் தொடக்கம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை நவநீத கிருஷ்ணன் திருக்கோலமாய் காட்சியருளல்.
* திருநெல்வேலி நெல்லை யப்பர், சென்னை மல்லீஸ்வரர் ஆலயங்களில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் காலை கிருஷ்ணாவதாரம், இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.



1-ந்தேதி (சனி) :

* திருநெல்வேலி கரியமாணிக்கப்பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் ரத ஊர்வலம்.
* திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள் கோவில் உற்சவம், சூரிய பிரபையில் பவனி.
* திருவாதவூர் சிவபெருமான் இந்திர விமானத்தில் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.
* மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் ராமாவதார காட்சியளித்தல், இரவு அனுமன் வாகனத்தில் பவனி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையிலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

3-ந்தேதி (திங்கள்) :

* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி விடையாற்று உற்சவம்.
* பழனி முருகன் கோவில் உற்சவம் தொடக்கம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் ஆண்டாள் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* மேல்நோக்கு நாள்.

Similar News