ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (21.3.2017 முதல் 27.3.2017 வரை)

Published On 2017-03-21 03:57 GMT   |   Update On 2017-03-21 03:57 GMT
21.3.2017 முதல் 27.3.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
21-ந்தேதி (செவ்வாய்) :

திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் பவனி.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கண்ட பேராண்ட பட்சிராஜ அலங்காரம்.
உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், இரவு வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.
சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
கீழ்நோக்கு நாள்.

22-ந்தேதி (புதன்) :

மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை பல்லக்கில் பவனி, இரவு ராஜாங்க அலங்காரத்தில் காட்சியருளல்.
உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம்.
திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி வரும் காட்சி.
திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
கீழ்நோக்கு நாள்.

23-ந்தேதி (வியாழன்) :

முகூர்த்த நாள்.
திருநெல்வேலி நகரம் கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் வீதி உலா.
திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்தில் பவனி, இரவு தங்க குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி பட்டாபிராமர் திருக்கோலமாய் காட்சியருளல்.
மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (வெள்ளி) :


சர்வ ஏகாதசி.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் ரத உற்சவம்.
உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.
சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
மேல்நோக்கு நாள்.



25-ந்தேதி (சனி) :

சனிப் பிரதோஷம்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவரணம், சுவாமி- தாயார் புறப்பாடு.
சகல சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
மேல்நோக்கு நாள்.

26-ந்தேதி (ஞாயிறு) :

முகூர்த்த நாள்.
மாத சிவராத்திரி.
உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், இரவு சுவாமி- அம்மன் புஷ்பக விமானத்தில் பவனி.
திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் ஆளேறும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபதநாதர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
மேல்நோக்கு நாள்.

27-ந்தேதி (திங்கள்) :

அமாவாசை.
திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருடோற்சவம்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் வைகுண்டநாதர் சேவை.
திருப்புவனம் கோதண்டராம சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்.
உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், மாலை புஷ்ப யாகம் செய்தருளல்.
கீழ்நோக்கு நாள்.

Similar News