ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (14-3-2017 முதல் 20-3-2017 வரை)

Published On 2017-03-14 08:51 IST   |   Update On 2017-03-14 08:51:00 IST
14-3-2017 முதல் 20-3-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
14-ந்தேதி (செவ்வாய்) :

* காரடையான் நோன்பு.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.
* சமநோக்கு நாள்.

15-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம்.
* காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி வரும் காட்சி.
* வேதாரண்யம் சிவபெருமான் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.

16-ந்தேதி (வியாழன்) :


* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் எழுந்தருளல்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோவிலில் லட்ச தீபக் காட்சி.
* சமநோக்கு நாள்.



17-ந்தேதி (வெள்ளி) :

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புன்னைமரக் கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல்.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை கற்பக விருட்ச வாகனத்தில் பவனி, இரவு சுவாமி- அம்மன் கமல பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்.
* உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சூரிய பிரபையிலும் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை பெரிய வைரத் தேரில் வீதி உலா, இரவு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

18-ந்தேதி (சனி) :

* திருக்குறுக்குடி 5 நம்பிகள், 5 கருட வாகனத்தில் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கிலும், இரவு வெள்ளி சேஷ வாகனத்திலும் வலம் வருதல்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் சிறப்பு ஆராதனை.
* சமநோக்கு நாள்.

19-ந்தேதி (ஞாயிறு) :

* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் வீதி உலா.
* உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரமாய் காட்சியளித்தல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

20-ந்தேதி (திங்கள்) :

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் வீதி உலா.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்தில் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் இரவு வெள்ளி அனுமன் வாகனத்திலும், தாயார் கமல வாகனத்திலும் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.

Similar News