ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (7-3-2017 முதல் 13-3-2017 வரை)

Published On 2017-03-07 03:50 GMT   |   Update On 2017-03-07 03:50 GMT
7-3-2017 முதல் 13-3-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
7-ந்தேதி (செவ்வாய்) :

* திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரம்.
* மதுரை கூடலழகர் எண்ணெய் தாழி சேவை, கிருஷ்ணன் அலங்காரம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
* நத்தம் மாரியம்மன் பால்குட ஊர்வலம், மின் விளக்கு அலங்கார ரதத்தில் பவனி.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை.
* மேல்நோக்கு நாள்.

8-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் காட்சி தருதல்.
* மதுரை கூடலழகர் எடுப்பு சப்பரத்தில் நாச்சியார்களுடன் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.

9-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* மதுரை நன்மைதருவார் திருக்கல்யாண உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதி உலா.
* காரமடை அரங்கநாதர் திருக்கல்யாணம்.
* திருப்போரூர் முருகப்பெருமான் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.



10-ந்தேதி (வெள்ளி) :

* பிரதோஷம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ரத உற்சவம்.
* காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளி ரத வீதி உலா.
* மதுரை கூடலழகர் நாச்சியாளர்களுடன் தங்க சிவிகையில் ஏகாந்த சேவை.
* கீழ்நோக்கு நாள்.

11-ந்தேதி (சனி) :

* மாசி மகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.
* திருக்கோட்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தல்.
* கீழ்நோக்கு நாள்.

12-ந்தேதி (ஞாயிறு) :

* ஹோலி பண்டிகை.
* பவுர்ணமி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஞ்சள் நீராடல்.
* மதுரை கூடலழகர் நாச்சியார்களுடன் தெப்ப உற்சவம்.
* திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்சம்.
* காரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.

13-ந்தேதி (திங்கள்) :

* காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம்.
* திருக்கோட்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தங்க தோளுக்கினியானில் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரையில் திருவீதி உலா.
* நத்தம் மாரியம்மன் கோவிலில் பால்காவடி ஆட்டம்.
* மேல்நோக்கு நாள்.

Similar News